நடிகை கங்கனாவை அறைந்த பெண் காவலர்.. நேரில் பாராட்டி ஒன்றாக போட்டோ எடுத்தாரா ராகுல்? உண்மை என்ன?
டெல்லி: பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத்தை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பெண் காவலருடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டதாக சோஷியல் மீடியாவில் போட்டோ ஒன்று பரவி வருகிறது.
ஜூன் 6ம் தேதி மதியம் சுமார் 3.30 மணியளவில் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்திருக்கிறார். அப்போது அவரிடம் வழக்கமான சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப்படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கங்கனாவின் கன்னத்தில் பளார் அறையை விட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் நிலை குலைந்த கங்கனாவை, அவருடைய பாதுகாவலர்கள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப்படை வீரர்கள், கவுரை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ஷேர் ஆகி பெரும் விவாதங்களை கிளப்பியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட கங்கனா,
"நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார், பின்பு என்னை திட்டினார். ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் உள்ளடக்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அவர் மீது ஐபிசி பிரிவு 323 மற்றும் 341 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்திருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர், கடந்த செப்டம்பர் மாதம் கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில், "கலவரத்திற்கு வழிவகுத்த, சிஏஏ பற்றித் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிய அதே நபர்கள், இப்போது வேளாண் சட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்புகிறார். அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் 'பயங்கரவாதிகள்" என்று கூறியிருந்தார் இதானல்தான் அவரை தாக்கினேன் என்று கூறியிருந்தார்.
இது எல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிஐஎஸ்எஃப் பெண் காவலர், ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து இருந்ததை போல புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து உண்மை சரிபார்ப்பு குழுவினர் உண்மையை தெரியப்படுத்தியுள்ளனர்.
அதாவது சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் இருப்பவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஓசியன் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ திவ்யா மஹிபால் மதேர்னா ஆவார். இந்த போட்டோவை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எனவே இதில் இருப்பது கங்கனாவை தாக்கிய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பாஜக எம்பி கங்கனா ரணாவத்தை தாக்கிய பெண் சிஐஎஸ்எஃப் காவலருடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முடிவு
ராகுல் காந்திக்கு பக்கத்தில் இருப்பவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ திவ்யா மஹிபால் மதேர்னா.
ரேட்டிங்
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications