Fact Check: ஆதாருடன் செல்போன் எண் இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா? உண்மை என்ன?
சென்னை: ஆதார் கார்டுடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பேக்ட் செக் விளக்கம் அளித்துள்ளது.
முதியோர் உதவி தொகை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. மக்களிடையே பீதியை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பும் மக்கள் இசேவை மையங்களில் குவிந்துவிடுகிறார்கள். இது தமிழகத்தில் அவ்வப்போது நடக்கிறது

தமிழ்நாட்டில் 60 வயதான ஆண்கள் மற்றும் 58 வயதான பெண்களுக்கு முதியோர் உதவி தொகையாக மாதம் 1200 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை விதவையர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவி தொகையை பெற ஆதார் அட்டை அவசியம் ஆகும்.
முதியோர் உதவி தொகையை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கிறது தமிழக அரசு. முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் அவர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பயனாளிகளில் எவரேனும் உயிரிழந்தால் அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக செயலிழந்து விடும்.
அவ்வாறு செயலிழந்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் முதியோர் உதவித் தொகை மீண்டும் அரசின் கணக்கிற்கே திரும்பி வரும் வகையில் அரசு வசதி செய்திருக்கிறது. முதியோர் உதவி தொகை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. மக்களிடையே பீதியை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் வதந்திகளை பரப்பி விடுகிறார்கள் அப்படித்தான் தற்போது ஆதார் கார்டுடன், செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதியோர்கள், உடனே இசேவை மையங்களில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான முதியோர்கள் குவிந்த காரணத்தால் அதிகாரிகள் ஆடிப்போனார்கள். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இந்த வதந்தி வேகமாக பரவியது. கடந்த மாதம், முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் விவரம் மற்றும் உதவித் தொகை சரியான முறையில் சேருகிறதா என அறிய விரும்பிய அரசு, பயனாளிகளின் ஆதார் கார்டில் உள்ள செல்போனை தொடர்பு கொண்டதாக செல்லப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான தொலைப்பேசி எண்கள் தவறாக இருந்தது. இதையடுத்து, சரியான செல்போன் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், அதற்கு குறிப்பிட்ட காலக்கெடு கிடையாது. ஆகையால் இந்த ஆண்டு முழுவதும் பயனாளிகள் தங்களின் உண்மையான செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிலர் ஆதாருடன் செல்போன் எண்ணை இந்த மாதத்திற்குள் இணைக்காவிட்டால், முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பி விட்டனர். இதனால் முதியோர் உதவித் தொகை பெறும் முதியவர்கள் பலர், கடந்த சில நாட்களாக திருத்தணி நகராட்சி அலுவலகம், மற்றும் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்களில் தினமும் ஆதார் கார்டுடன் செல்போன் எண் இணைப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
ஆதாருடன் செல்போன் எண்ணை இந்த மாதத்துக்குள் இணைக்காவிட்டால் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
முடிவு
இது முற்றிலும் வதந்தியே. இந்த மாதத்துக்குள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காவிட்டால் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது.வதந்தியை நம்பாதீர் !
ரேட்டிங்
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications