தரைவிரிப்புகளை உண்பதற்கு தடையா?.. சென்னை விமான நிலையத்தில் போர்டா?.. அதெல்லாம் பொய்! நம்பாதீங்க!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் "தரைவிரிப்புகள் உண்பது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது" என வைக்கப்பட்டுள்ள பலகை உண்மையில்லை என்றும் அதை யாரோ மார்பிங் செய்து வைரலாக்கி வருவதும் தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் "தரைவிரிப்புகளை உண்பது கட்டாயம் தடைசெய்யப்பட்டுள்ளது" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன முட்டாள்தனமான அறிவிப்பு இது, யாராவது தரைவிரிப்புகளை உண்பார்களா என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு பலகையுடன் கூடிய புகைப்படத்தை நடிகை சபானா ஆஸ்மி வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒரு போதும் தரைவிரிப்புகளை உண்டதில்லை என தெரிவித்துள்ளார்.
இவரது ட்வீட்டுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தரைவிரிப்புகள் குறித்து விமான நிலையம் பெயர் பலகை வைத்துள்ளதாக வைரலாகும் பலகை மார்பிங் செய்யப்பட்டது. இது 2015 ஆம் ஆண்டு முதல் வைரலாகி வருகிறது.

இதை யாரும் நம்ப வேண்டாம் என 2019ஆம் ஆண்டு சென்னை விமான நிலைய ஆணையம் அறிவிப்பையும் வெளியிட்டது. உண்மையை ஆராயாமல் யாரும் இது போன்ற படங்களை வைரலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
தரைவிரிப்புகள் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு
முடிவு
தரைவிரிப்புகள் உண்பது தடை செய்யப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை என விமான நிலையம் விளக்கம்
ரேட்டிங்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications