Fact check: மாற்றுத்திறனாளியிடம் மனு வாங்க மறுத்த திமுக அமைச்சர்? தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன!
சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி அளித்த மனுவை அமைச்சர் ராஜேந்திரன் வாங்க மறுத்ததாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், அதற்குத் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதில் அமைச்சர்களும் நேரடியாகக் கலந்து கொண்டு நேரடியாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குகின்றனர்.

அப்படி தான் சமீபத்தில் சேலத்தில் நடந்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அதில் அவர் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற மறுத்தாக தகவல் பரவியது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அதன்படி சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தான் மாற்றுத்திறனாளி ஒருவர் அமைச்சர் ராஜேந்திரனிடம் மனு தர முயன்றதாகவும் இருப்பினும் அந்த மனுவை வாங்க மறுத்து அவமதித்தாக இணையத்தில் அதிமுக நிர்வாகிகள் விமர்சித்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்திராணி என்பவர், "மாற்றுத்திறனாளி என்ற ஈரம் கூட இல்லாத திமுக அமைச்சர்... ஏன் உங்க கைகள் மனுக்களை வாங்காதோ சால்வைகளை தான் பெறுமோ? ராஜினாமா பண்ணிட்டு போங்க மக்களுக்கு பதில் சொல்ல வலிச்சா" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதற்கிடையே இது பொய்யான தகவல் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "நவ. 5ம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றதோடு, அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
அதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அளித்த மனுவை பெற்றுப் பார்த்த பிறகு அதை முறையாகப் பதிவு செய்யச்சொல்லி அங்குள்ளவரின் மூலம் உதவுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அந்த காட்சியை மட்டும் நீக்கி விட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்" என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
சேலம் ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவர் அளித்த கோரிக்கை மனுவை அமைச்சர் ராஜேந்திரன் வாங்க மறுத்ததாகத் தகவல் பரவியது.
முடிவு
இது பொய்யான தகவல் என்றும் மாற்றுத்திறனாளி அளித்த மனுவை பெற்று, பிறகு அதை முறையாகப் பதிவு செய்ய அங்குள்ளவரின் மூலம் உதவுமாறு அமைச்சர் கூறியதாகத் தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது.
ரேட்டிங்
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications