Fact Check: பார்சல் டெலிவரிக்கு அட்ரஸ் கேட்டு மெசேஜ்! இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி.. உண்மை என்ன?
சென்னை: பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்படாமல் இருப்பதாகவும், சரியான அட்ரஸை கொடுத்து பார்சலை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய தபால் துறையிடமிருந்து மெசேஜ் வந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் உண்மைத் தன்மை என்ன? இது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சமீப காலங்களாக செல்போன், ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கவர்ச்சிகரமான வாசகங்களுடன் கூடிய லிங்க்கை அனுப்பிவிட்டு, இதை கிளிக் செய்தால் பரிசு கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் அனுப்பி பணம் பறிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோசடிக்காரர்கள் தற்போது புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கின்றனர்.

அதாவது, "உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது, நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம். ஆனால், உங்கள் முகவரி முழுமையாக இல்லாததால் அதை அனுப்ப முடியவில்லை. எனவே உங்கள் முகவரி விவரங்களை 48 மணி நேரத்திற்குள் உள்ளிடுங்கள். இல்லையெனில், உங்கள் பார்சல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அப்டேட் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் பார்சலை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம். இப்படிக்கு இந்தியா போஸ்ட்!" என ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு மெசேஜ் வந்திருக்கிறது.
ஒன்றிரண்டு அல்லாமல் ஆயிரக்கணக்கான பயனாளர்களுக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது. எனவே சந்தேகத்தின் பேரில் இது குறித்து ஐபோன் பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர் புகார்களையடுத்து இது குறித்து மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதாவது இப்படி வரும் மெசேஜ்கள் உண்மையானது கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. "புதிய நாடுகடந்த ஊழல் எச்சரிக்கை: iPhone பயனர்கள் முன்பின் தெரியாத எண்களிலிருந்து iMessage மூலம் மோசடி செய்திகளைப் பெறுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை பிளாக் செய்ய வேண்டும்" என உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறது.
ஐபோன் பயனர்கள் மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்யும் போது, டெலிவரியை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். இந்த தொகையை செலுத்தி, OTPயை உள்ளிடும்போது, மோசடிக்காரர்கள் பயனாளரின் முக்கியமான தரவுகள் அனைத்தையும் திருடி விடுவார்கள். மட்டுமல்லாது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தையும் சுருட்டிக்கொள்வார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, சந்தேகம்படும்படியான எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
டெலிவரி செய்யப்படாமல் இருக்கும் பார்சல்கள் குறித்து இந்திய தபால் துறை ஐபோன் பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ்களை அனுப்புகிறது.
முடிவு
இந்திய தபால் துறை இப்படி எந்த எஸ்எம்எஸ்களையும் அனுப்பவில்லை. இப்படி வரும் மெசேஜ்கள் போலியானவை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ரேட்டிங்
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications