Fact check: SIR காரணமாக வங்கதேசத்திற்கு தப்பியோடும் சட்ட விரோத குடியேறிகள்.. வெளியான வீடியோ உண்மையா?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது சார் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அங்கு வசித்து வந்த வங்கதேசத்தினர் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்புவதாகச் சொல்லி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அது உண்மை தானா.. அந்த வீடியோவின் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

பீகாரில் தேர்தலுக்கு முன்பு சார் பணிகள் நடந்து முடிந்தது. அதேபோல இப்போது தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

Fact check Illegal Immigrants leaving West Bengal After SIR No Bangladesh video Falsely Linked

வீடியோ

இதற்கிடையே சார் அறிவிப்பு வெளியான உடன், மேற்கு வங்கத்தில் வசித்த சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் பலரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதாகச் சொல்லி, சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பயணிகள் சிலர் கூட்டமாக ஒரு படகில் ஆபத்தான முறையில் பயணிப்பது போல இருக்கிறது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள், இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்கள் என்றும் சார் பணிகள் அறிவிக்கப்பட்ட பிறகு இவர்கள் வங்கதேசத்திற்கே திரும்பிச் செல்கிறார்கள் என்று கூறி பதிவிட்டு வருகிறார்கள்.. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவும் நிலையில், பலரும் இதை உண்மை என நம்ப ஆரம்பித்துவிட்டனர். மேலும், இதுபோல வங்கதேசத்தைச் சேர்ந்த பலரும் மேற்கு வங்கத்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களைக் கண்டுபிடிக்கவே சார் பணிகள் நடப்பதாகவும் சொல்லி நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை என்ன

இது குறித்து நாம் செக் செய்து பார்க்கும்போது இது முழுக்க முழுக்க தவறானது என்று தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ வங்கதேசத்தில் உள்ள மோங்லா படகு மையத்தில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இது அங்கு தினசரி நடைபெறும் வழக்கமான படகுப் போக்குவரத்து தொடர்பான வீடியோவாகும்.

அதாவது அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏரியின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்குச் செல்லப் படகுகளைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும், போதிய படகுகள் இல்லாததால் மக்கள் கூட்டமாக நின்றே படகில் ஏற வேண்டி இருக்கும். அது தொடர்பான வீடியோவை தான் சார் பணிகளுடன் இணைத்து பரப்பி வருகிறார்கள். நாம் விசாரித்த வரை இந்த வீடியோவுக்கும் மேற்கு வங்கத்தில் நடக்கும் சார் பணிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பது போலத் தெரியவில்லை.

வங்கதேச படகுகள்

மேலும், இந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கூகுள் ரிவர்ஸ் செர்ச் செய்யும்போதும் அது வங்கதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ போலவே தெரிகிறது. அதில் வங்கதேச படகுப் பயணம் தொடர்பான தகவல்களே இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள பகேர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மோங்லா- காசியாகலி என்ற பகுதியில் இது எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோ அக்டோபர் 1ம் தேதி முதலில் இணையத்தில் பகிரப்பட்டது. அதாவது மேற்கு வங்கத்தில் சார் அறிவிப்பு வருவதற்குப் பல வாரங்களுக்கு முன்பே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

பொய்

கல்பேலா உட்பட பல வங்கதேச செய்தி நிறுவனங்களின் செய்திகளை ஆய்வு செய்தபோதும் இதுவே உறுதியாகிறது.. மோங்லா-மோரேல்கஞ்ச் பகுதியில் உள்ள பாங்குச்சி ஆற்றில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்ய முடிகிறது. கூகுள் மேப்ஸை ஆய்வு செய்தபோதும் இது உண்மைக்கு மாறான தகவல் என்பது தெரிய வந்தது.

Fact Check

வெளியான செய்தி

SIR அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தினர் வெளியேறுவதாக வீடியோ பரவுகிறது

முடிவு

அது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது. சார் பணிகளுக்கும் அதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+