Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact check: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வதந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி இருக்கையில், பழனி பஞ்சாமிரத்தத்திலும் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக சைடு கேப்பில் சிலர் வதந்தியை பரப்ப தொடங்கியுள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். வீடியோவில் "திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில். இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

palani panchamirtham

கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன். இதனைச் சரிசெய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை" என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், லட்டுக்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன. சோதனை முடிவுகள் குறித்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கால்நடை மற்றும் உணவு ஆய்வு மையத்தின் (CALF) ஆய்வகம் விளக்கமாக அறிக்கை அளித்திருக்கிறது.

இதில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவை லட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ் மற்றும் பல காய்கறிகளின் எண்ணெய் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மறுபுறம் இந்த சம்பவத்தின் பரபரப்பை பயன்படுத்திக்கொண்டு சிலர், "பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு கலக்கப்படுகிறது" என்று வதந்தியை பரப்பியிருந்தனர்.

குறிப்பாக பாஜக மாநில துணை தலைவர் செல்வகுமார் இது குறித்து ட்விட்டரில் கூறியிருந்த கருத்துக்கள் பெரும் விவாதமாக எழுந்தன. அதாவது, "திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods ) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது சனாதன ஒழிப்பு திமுக அரசு. ஆந்திராவின் பெருமை திருப்பதி, தமிழகத்தின் பெருமை பழனி. ஒரே சமயத்தில் இரண்டு கோவில்களிலும் ஒரே நபர்.

கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது, பல முறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், அறங்காவலர் குழு மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற?

பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யப்படும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும்" என்று செல்வகுமார் கூறியிருந்தார்.

இதனை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுத்திருக்கிறது. அதாவது, "பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது" என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது'என்று சமூக வலைத்தளங்களில்பரவகிறது

முடிவு

பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+