Fact Check: கூடங்குளம் அணுக்கதிர்வீச்சால் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து கரை ஒதுங்கின? உண்மை என்ன?
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக் கதிர் வீச்சால் மீன்கள் கரை ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட்செக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட பல கிராமங்களில் கடற்பரப்பில் கிளாத்தி வகை மீன்கள் கொத்து கொத்தாக இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கூடங்குளத்தைச் சுற்றிய கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மிகப் பெரிய அளவில் துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து கடற்பரப்புக்கு வந்த பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் கரை ஒதுங்கியது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதேநேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு வெளிப்பட்டதால்தான் கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
ஆனால் கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இந்த மீன்கள் கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அளித்த விளக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கிளாத்தி மீன்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விற்பனையாகாத மீன்களை மீனவர்கள் கடலில் கொட்டினர். இந்த மீன்கள்தான் நீரோட்டம் காரணமாக கூடங்குளம் கடற்கரை கிராமங்களில் ஒதுங்கின. கூடங்குளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஆகையால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்தது வதந்திதான் என்பது உறுதியானது.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
முடிவு
கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கொட்டியதால் நீரோட்டத்தில் மீன்கள் அடித்துவரப்பட்டன
ரேட்டிங்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications