காந்திக்கு பதில் ராமர்.. 500 ரூபாயில் இடம்பெறும் அயோத்தி ராமர் கோவில்? வெளியான போட்டோ.. உண்மையா
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு பதில் ராமரின் படமும், பின்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் படமும் இடம்பெறுவதாக போட்டோக்கள் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்து விபரம் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கோவில் பணிகள் முழுவதுமாக இன்னும் முடியவில்லை. முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நேற்று முதல் தொடங்கின. வரும் 22ம் தேதி மாலை வரை இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. ஜனவரி 22ல் நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நோட்டு என்பது மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. அதாவது தற்போதைய 500 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் ‛தேசப்பிதா' மகாத்மா காந்தியின் போட்டோ இருக்கும். பின்பகுதியில் டெல்லி செங்கோட்டையின் போட்டோ என்பது உள்ளது.
ஆனால் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு இந்த போட்டோக்கள் என்பது மாற்றம் செய்யப்பட உள்ளதாக இணையதளத்தில் போட்டோக்கள் பரவி வருகின்றன. அதன்படி 500 ரூபாய் நோட்டின் முன்பகுதியில் கடவுள் ராமர் போட்டோ என்பது இடம் பெறும். பின்பக்கத்தில் டெல்லி செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் மற்றும் வில், அம்பு இடம்பெறும் என போட்டோ பரப்பப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவலை பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் பகிர்ந்து இதனை கட்டாயம் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றன். மேலும் சிலர் இந்த மாற்றம் என்பது வரவேற்க்கத்தக்கது எனவும், மற்றொரு தரப்பினர் காந்தியின் போட்டோவை எந்த காரணம் கொண்டும் 500 ரூபாய் நோட்டில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
இதனால் இது தற்போது விவாதமாகி உள்ளது. இதுபற்றி ஆய்வு செய்தபோது மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி தரப்பில் 500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் ராமர், செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் என மாற்றம் செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதும், தற்போது ராமர் மற்றும் அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்டவை 500 ரூபாய் நோட்டில் இருப்பது போன்று பரவும் போட்டோ என்பது போலியானதும் உறுதியாகி உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் Know Your Notes என்ற ஆப்ஷனில் சென்று பார்த்தால் அதில் 500 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக ரூ.500 நோட்டில் மகாத்கா காந்தி மற்றும் செங்கோட்டையின் போட்டோ இடம்பெற்றிருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நாட்டில் காந்திக்கு பதில் ராமர், செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் போட்டோ இடம்பெற உள்ளதாக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
முடிவு
500 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரேட்டிங்
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications