Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: மகளிருக்கான ரூ 5000 உரிமைத் தொகையை வங்கி கணக்கில் இருந்து திருப்பி எடுக்கிறதா அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை ரூ 5000-த்தை உடனே எடுத்துக் கொள்ளாவிட்டால் வங்கியிலிருக்கும் பணத்தை அரசு திருப்பி எடுக்கும் என்ற பொய் தகவல் பரவி வருகிறது. இதை தமிழக அரசு மறுத்துள்ளது.

Fact Check

இதுகுறித்து தமிழக அரசு உண்மை சரிபார்க்கம் (TN Fact Check) தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மகளிருக்கு அரசு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி!

பரவிய செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியது.

இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கலைஞர் உரிமைத் தொகை ரூ 5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் இருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் அதை அரசே திருப்பி எடுத்துக் கொள்ளும்.

உண்மை என்ன

கலைஞர் உரிமைத் தொகையாக ரூ 5 ஆயிரத்தை தமிழக அரசு வரவு வைத்துள்ள நிலையில் அதை திருப்பி எடுத்துவிடும் என்ற செய்தி பொய்யானது.

ரேட்டிங்

False

நடந்தது என்ன

கலைஞர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதாமாதம் ரூ 1000-த்தை தகுதியுள்ள மகளிருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலை காரணம் காட்டி ரூ 1000 உரிமைத் தொகையை பாஜக நிறுத்த பார்ப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு தலா ரூ 1000 என ரூ 3000த்தையும், கோடைக்கால சிறப்பு தொகை ரூ 2 ஆயிரத்தையும் தமிழக அரசு மகளிர் கணக்கில் வரவு வைத்தது.

இதை தமிழகத்தில் இந்த திட்டத்தால் பயன்பெறும் மகளிர் கொண்டாடி மகிழ்கிறார்கள். பாஜக அரசு முடக்க பார்த்த நிலையில் ஸ்டாலின் முன்கூட்டியே நேற்று ஒரே நாளில் 1.31 கோடி பேருக்கு தலா ரூ 5000 வீதம் ரூ 6550 கோடியை வரவு வைத்துள்ளார்.

தமிழக வரலாற்றில் இதுவரை ஒரு திட்டத்திற்கு ஒரே நாளில் இத்தனை கோடி ரூபாயை செலவு செய்தது இதுதான் முதல் முறை என்கிறார்கள். அது போல் ஒரே நாளில் இத்தகைய பெரிய தொகையை விடுவித்ததும் தமிழக நிதித் துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+