Fact check: விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரை புரட்டி எடுத்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரைத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், பரவி வரும் இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் காணொளி.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் அதேநேரத்தில், சமூக வலைதளங்களின் வாயிலாக பொய்யான செய்திகளும் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வீடியோ ஒன்று சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் காடுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காட்டுப்பன்றி ஒன்று, சாலையோரம் ஒரு நபரை கடுமையாகத் தாக்கி புரட்டி எடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன் இது விருதுநகர் அருகே பாலவநத்தம் எனும் பகுதியில் உள்ள சாலையில் காட்டுப்பன்றி ஒன்று மனிதரைத் தாக்கியது என குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள முடுலிபள்ளி எனும் கிராமம் ஒன்றில் காட்டுப்பன்றி தாக்கியபோது எடுக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளியை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
விருதுநகர் அருகே சாலையில் காட்டுப்பன்றி ஒன்று மனிதரைத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு
இந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் காட்டுப்பன்றி தாக்கியபோது எடுக்கப்பட்டது.
ரேட்டிங்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications