வெளிநாடு சென்று வருபவர்களுக்கு "குடியுரிமை தக்க வைப்பு வரி" போடப்பட உள்ளதா? உண்மை என்ன
டெல்லி: வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது வெளிநாடு பயணம் செய்து இருந்தால் ''குடியுரிமை தக்க வைப்பு வரி' வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று இணையத்தில் பரவியது. இது உண்மையா என்பதை இங்கு பார்க்கலாம்.
அரசாங்கம் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தொகையே வரி என்பதாகும். ஒரு நாட்டின் வருவாய்க்கு முக்கிய பங்களிப்பை வரி தான் அளிக்கிறது. தனிநபர் வருமானம், நிறுவனங்களின் இலாபம், பொருட்கள், சேவைகள் மற்றும் பரிவர்த்தனை போன்றவைகளுக்கு அரசு வரி விதிக்கின்றது.

சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி, மாநில ஆயத்தீர்வை வரி, நில வருவாய் மற்றும் சேவை வரி உள்பட பல்வேறு விதமான வரிகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கின்றன. அதேபோல இந்தியாவில் தனிநபருக்கான வரியாக வருமான வரி வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, புதிய வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. வருமான வரிபோக பல்வேறு விதமான மறைமுக மற்றும் நேரடி வரிகளும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வரலாம்.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் "குடியுரிமை தக்க வைப்பு வரி" என ஒன்று போடப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது வெளிநாடு பயணம் செய்து இருந்தால் ''குடியுரிமை தக்க வைப்பு வரி' வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பொதிகை செய்தி வெளியிட்டது.

நியூஸ் கார்டு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவியது. சமூக வலைத்தளங்களில் இதைப் பார்த்த பலரும் உண்மை என நம்பி இது குறித்த விவாதிக்கவும் தொடங்கினர். பலரும் வாட்ஸ் அப் குரூப்களில் பரவ விட்டனர். இந்த நிலையில், பொதிகை நியூஸ் கார்டுடன் சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த தகவல் போலியானது என்று தெரியவந்துள்ளது. வெளிநாடு சென்று வருபவர்களுக்கு அதுபோல எந்த ஒரு வரியும் விதிக்கப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த செய்தி போலியானது ஆகும்.

Fact Check
வெளியான செய்தி
வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது வெளிநாடு பயணம் செய்து இருந்தால் "குடியுரிமை தக்க வைப்பு வரி" வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பொதிகை சே
முடிவு
"குடியுரிமை தக்க வைப்பு வரி" என்ற ஒரு வரியை விதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. பொதிகை சேனலின் பெயரில் பரவும் அந்த நியூஸ் கார்டு போலியானது.
ரேட்டிங்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications