Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: பாபர் கிபி 1556ல் ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டினாரா? பாஜக வெளியிட்ட வீடியோ உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகலாய பேரரசர் பாபர், கி.பி 1556ம் ஆண்டு ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பாஜகவின் ஆதரவாளர்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

 False news spread that Babar demolished Ayodhya Ram Temple in 1556

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் கோயில் குறித்து பாஜகவினரால் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களில் சில தகவல்கள் போலியானவை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

இப்படி இருக்கையில், பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் 1.26 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், "கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார். ராமராஜ்யம் - போராட்டத்திலிருந்து முடிவு வரை, அத்தியாயம் 1 - அமாவாசை, 20ம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் மணி எப்படி ஒலித்தது என்பதை பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடியோவை பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் ஷோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தனர். ஆனால் இது உன்மையான தகவல் கிடையாது என சமூக செயற்பாட்டாளர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளனர். அதாவது,

"இந்தியாவை ஆட்சி செய்து வந்த இப்ராகிம் லோடியை வீழ்த்த, அவருடைய எதிரி தெளலத்கான் லோடியின் வேண்டுகோளின் பெயரிலேயே பாபர் இந்தியாவிற்குள் வந்திருக்கிறார். இப்படி வந்தவர் பின்னர் முகலாய பேரரசை தோற்றுவித்தார். இவரது காலத்தில்தான் முகலாய பேரரசு இந்தியாவில் வளர்ந்தது. பல்வேறு நிலப்பரப்புகளை கைப்பற்றி இவர், இறுதியாக கி.பி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கி.பி 1530-ல் இறந்தார்" என்று கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 11ம் வகுப்பு பாடபுத்தகத்திலும் இந்த விவகரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, "பாபருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது வாரிசான ஹூமாயூன், 1530 முதல் 1540 வரையிலும், பின்னர் ஷெர்ஷா அரசரின் தோல்விக்கு பின்பு மீண்டும் 1555 முதல் 1556 வரையிலும் இந்தியாவை ஆட்சி செய்தார். இறுதியாக கி.பி 1556-ல் தனது டில்லி கோட்டையின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து ஹூமாயூன் இறந்து போனார்" என்கிற தகவல்களையும் ஆதாரப்பூர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன?: எனவே, கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார் என்கிற தகவல் உண்மையில்லை என்று தெரிய வருகிறது.

Fact Check

வெளியான செய்தி

பாஜக வெளியிட்ட வீடியோவில் “ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, முகலாய மன்னர் பாபர், கி.பி 1556 ஆம் ஆண்டில், மசூதியை கட்டினார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

முடிவு

முகலாய மன்னர் பாபர், கி.பி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கி.பி 1530 ஆண்டிலேயே இறந்தார்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+