“மாமன்னன்”.. முன்னாள் சபாநாயகர் தனபாலை நேற்று அதிமுக கூட்டத்தில் நிற்க வைத்தாரா எடப்பாடி? FACT CHECK
சென்னை: நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எடப்பாடி பழனிசாமி நிற்க வைத்ததாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து அலசுவோம்.
நேற்று காலை 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மதுரையில் அதிமுகவின் பொன்விழா மாநாட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டார்கள். ஆகஸ்டு 20 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டிற்கான லட்சினையையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" இலச்சினையை இன்று தலைமைக் கழகத்தில் வெளியிட்டேன்.
இந்நன்னாளில் தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமாக நம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்." தொடர்வதில் பெருமை கொள்வோம்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அந்த லட்சினையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சு மாநாடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக செயலாளர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலை எடப்பாடி பழனிசாமி அமர வைக்காமல் நிற்க வைத்ததாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் நின்றுகொண்டு இருக்கும் நிலையில் தனபால் மட்டும் நடுவே நிற்பதைபோன்று உள்ளது. ஆனால், அதை உற்று நோக்கினால் அவர் நடந்து வருவதைபோன்று தெரிகிறது. திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தியும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, "இன்று காலையில் தனபால் அவர்களை இருக்கையில் கூட அமர வைக்காத பம்மாத்து பழனிசாமி!" என்று குறிப்பிட்டு இருந்தார்.
சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் தனபாலின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகவும், உயர் பதவிகளை அடைந்தாலும் பட்டியலினத்தவர் என்பதால் எப்படியெல்லாம் கட்சிக்கு உள்ளே ஒடுக்கப்படுகிறார் என்பதை காட்டும் வகையில் அதன் கதை இருப்பதாகவும் கூறப்பட்டது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று, தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/dvpgK22IsL
— AIADMK (@AIADMKOfficial) July 5, 2023
இந்த நிலையில் தனபால் நேற்றைய கூட்டத்தில் நிற்க வைக்கப்பட்டதாக பகிரப்பட்ட படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உண்மை தன்மை குறித்து நாம் ஆராய அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட படங்களை நாம் பார்த்தோம். அதில், அவர் மக்களவை முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு அருகே அமர்ந்து இருக்கும் படம் உள்ளது.
எனவே தனபால் நிற்க வைக்கப்பட்டதாக வரும் தகவல் வதந்தி என்று உறுதியாகிறது. அவர் நின்றுகொண்டிருப்பதாக பகிரப்படும் படம் அவர் நடந்து வரும்போது எடுக்கப்பட்டு இருக்கலாம்.

Fact Check
வெளியான செய்தி
நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எடப்பாடி பழனிசாமி நிற்க வைத்தார்.
முடிவு
தனபால் முன்வரிசையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை அதிமுக வெளியிட்டுள்ளது.
ரேட்டிங்
-
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications