நாளை பள்ளி, கல்லூரிகள், வங்கிகளுக்கு விடுமுறையா? பரவிய தகவல் - வதந்தி! TN Fact check unit விளக்கம்!
சென்னை: நாளை (ஜூன் 6 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் தேசிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நாளை (ஜூன் 6ஆம் தேதி) வெள்ளிக் கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் தேசிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று பரவி வரும் தகவல் வதந்தியே என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

பரவி வரும் தகவல்
இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது" என்ற இணையதள செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் வதந்தி. வெள்ளிக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பரப்பப்படுவது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (Al) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. வதந்தியை நம்பாதீர்." எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நாளை (ஜூன் 6) வெள்ளிக்கிழமை பள்ளிகள் தேசிய பொது விடுமுறை என ஒரு தகவல் பரவியது.
முடிவு
நாளை பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications