இரவோடு இரவாக.. கரூரில் பிரேத பரிசோதனை செய்ததில் சதி கிடையாது.. தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்ற விதி இருக்கும் போது கரூரில் கூட்ட நெரிசலில் பலியான 39 பேருக்கும் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்தது ஏன் என்று தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் இது தவறான தகவல் என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கூறுகையில், 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு (மேலும் 2 பேர் நேற்றும், இன்றும் இறந்ததால் இரவில் 39 பேருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது) எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது' என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

fact check karur vijay

2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+