Fact Check: இவர்தான் ஹாத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!.. தவறான புகைப்படம் வைரல்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவ்வாறு வைரலாகும் புகைப்படம் அந்த பெண்ணே அல்ல என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது பெண்ணை அவ்வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த பெண்ணின் நாக்கை அறுத்து மிகக் கொடூரமாக தாக்கியது.

இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் நேற்றைய தினம் உயிரிழந்துவிட்டார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் மணீஷா வால்மீகிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படம் தவறானதாகும். இதில் உள்ளவர் பாதிக்கப்பட்ட பெண்ணே அல்ல. முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பொதுவெளியில் போடுவது சட்டப்படி குற்றமாகும்.
புகைப்படத்தை பொது வெளியில் போடுவது தவறு என்பது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே இது போன்று பெண்களின் படங்களை தவறாக வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்களே ஆனாலும் அவர்களின் புகைப்படம் வெளியிடுவதற்கு பதிலாக தவறிழைத்த அயோக்கியர்களின் புகைப்படங்களை வெளியிடலாம்.

Fact Check
வெளியான செய்தி
வைரலாகும் புகைப்படம் ஹாத்ராஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்
முடிவு
வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணே அல்ல
ரேட்டிங்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications