தங்கம் விலை அடுத்த ஆண்டில் 2 லட்சத்தை தொடும்.. ஆடிப்போக வைத்த உலக தங்க கவுன்சில் கணிப்பு
சென்னை: தங்கத்தின் விலையை தீர்மானிக்க சர்வதேச அமைப்பான உலக தங்க கவுன்சில் செயல்படுகிறது. இந்த அமைப்பு தான் தங்க நகை இருப்பு மற்றும் தங்க இருப்பு விவரங்களை கணிக்கிறது. இந்த அமைப்பின் சிஇஒ டேவிட் டெயிட், தங்கம் விலை கடுமையாக உயரக்கூடும் என்று கூறியுள்ளார். தற்போது ஒரு லட்சத்தை எட்டிய தங்கம் விலை, அடுத்த ஆண்டில் மேலும் உயரக்கூடும் என்றும், 10 கிராம் கொண்ட 24 காரட் தங்கம் ரூ.2 லட்சம் வரை நெருங்கக்கூடும் என்றும் உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
தங்கத்தைபொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் 22 மடங்கு வரை ஏறிவிட்டது. தங்கம் போல் அதிகப்படியான முதலீட்டு லாபம் ஏதாவது கொடுத்திருக்கிறதா என்றால் அது ரியல் எஸ்டேட்டை கூறலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் ரிஸ்க் அதிகம். சற்று கவனம் இல்லாமல் போனால் மொத்தமாக காலியாகிவிடும். அதேபோல் அவசரத்திற்கு விற்று வெளியேறினால் அடிமாட்டு விலைக்குத்தான் போகும். அதனால் ரியல் எஸ்டேட் கூட லாபம் பெரிதாக இருக்காது.

ஆனால் தங்கம் அப்படி இல்லை.. நம்பவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு தங்கம் விலை அடியோடு உயர்ந்துவிட்டது. தங்கம் விலை வெறும் ஒரே ஆண்டில் 75 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் விலை ஒரு பவுன் ஒரு லட்சம் என்கிற அளவில் உயர்ந்து விண்ணை முட்டி நிற்கிறது. இந்த சூழலில் தங்கம் விலை இரண்டு லட்சம் வரை ஏறும் என்று உலக தங்க கவுன்சிலே கணித்திருப்பது, பொதுமக்களை வாயடைக்க வைத்துள்ளது.
உலக தங்க கவுன்சில் என்பது டபுள்யூ.ஜி.சி. என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தங்க சந்தைக்கான ஒரு சர்வதேச அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பு தான் தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக இருக்கிறது. உலகெங்கிலும் இருக்கும் முன்னணி தங்க சுரங்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாக உள்ளது.
உலக தங்க கவுன்சில் அமைப்பு தான் உலக நாடுகளின் தங்கத்தின் தேவை, இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்த விரிவான அறிக்கைகளை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரியான டேவிட் டெயிட், சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் பலரையும் ஆடிப்போக வைக்ககூடிய விஷயத்தை கூறியுள்ளார்.. அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டிலும் பெரிய அளவில் உயரக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும் போது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமிப்பது, சீனாவில் தங்கத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது, ஜப்பானில் நிலவும் பணவீக்கத்தால் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, நிதிநிலையற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை தங்கம் விலை ஏறுவதற்கான முக்கிய காரணமாக கணித்துள்ளோம் என்றார்.
தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயரக்கூடும் என கணித்துள்ளார். இந்தியாவில் 10 கிராம் கொண்ட 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்க பொருளாதாரம் எதிர்பாராதவிதமாக மிக வேகமாக முன்னேறினாலோ அல்லது தற்போது உலக நாடுகள் மத்தியில் நிலவி வரும் போர் பதற்றங்கள் முற்றிலுமாக தணிந்தால் தங்கம்விலை சரிவை சந்திக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள்.
முன்னதாக 2024-ம் ஆண்டில் இதேபோல் உலக தங்க கவுன்சில், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், வங்கி நிலவரங்களால் இந்தியாவில் 2025-ல், 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றும் கணித்திருந்தது. அதேபோல் தான் ஆண்டு இறுதிக்குள் சரியாக ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications