அடுத்த சில மாதங்கள் ரொம்ப முக்கியம்.. தங்கம் விலை 12-15% வரை குறையும்.. வல்லுனர் விடுத்த வார்னிங்
சென்னை: தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் 12-15% வரை குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு
குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், குறுகிய காலத்தில்.. அதாவது சில மாதங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை உயரும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.
சமீப காலமாக புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.

இதுகுறித்து குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கூறுகையில், "தங்கத்தின் விலை உச்சத்தை எட்டிவிட்டது. வரும் இரண்டு மாதங்களில் டாலர் மதிப்பில் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளது."
தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் எச்சரித்திருந்தாலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித் சந்தீப் சபர்வால் கூறுகையில், "தங்கத்தின் விலை குறைய போகிறது. ஆனால் அதற்காக அச்சம் அடைய வேண்டாம். தங்கம் விலை குறையும் போது பலர் அதை வாங்குவார்கள். இதனால் தேவை அதிகரிக்கும். அதனால் மீண்டும் தங்கம் விலை உயர அது காரணமாக அமைந்து விடும். அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.
தற்போது தங்கத்தின் விலை உச்சத்தை எட்டிவிட்டது. இதனால் இதில் இனி கரெக்சன் நடக்க வேண்டும். இதனால் வரும் இரண்டு மாதங்களில் டாலர் மதிப்பில் 12-15% வரை குறைய வாய்ப்புள்ளது, எனவே உஷாராக இருக்க வேண்டும். வட்டி விகிதங்கள், நிலையான டாலர் மற்றும் பணவீக்கம் குறித்த அச்சம் குறைந்துள்ளதால், சில வல்லுநர்கள் தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைத்துள்ளனர்.
வெள்ளி மீது கவனம்
மேலும், தங்கம் மற்றும் வெள்ளியின் வரலாற்று தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், வெள்ளி அதிகமாக முதலீடு செய்யப்படாமல் உள்ளது.. அதில் கவனம் செலுத்தினால் லாபம் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது.கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.












Click it and Unblock the Notifications