தமிழ் நடிகை ருக்மணி வசந்தின் ஆபாச வீடியோ.. ஏஐ-யில் உருவாக்கி பரப்பிய 3 பேர்.. ஷாக் காரணம்
பெங்களூர்: கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் பிகினி உடை அணிந்தது போன்ற ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டதாக கூறி பெங்களூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் ஏசிஇ, சிவகார்த்திகேயனின் மதராசி, காந்தாரா சாப்ட்டர் -1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் தான் சில நாட்களாக ருக்மணி வசந்த் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் 'பிகினி' உடையில் இருக்கும் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக நடிகை ருக்மணி வசந்த் சார்பில் பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஏஐ உதவியுடன் சிலர் நடிகை ருக்மணி வசந்தின் வீடியோவை உருவாக்கி வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பாகல்கோட்டை மாவட்டம் சில்லகாமுக்கி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 24), சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவை சேர்ந்தவரும், பெங்களூர் காமாட்சிபாளையாவில் வசித்து வருபவருமான சந்திரகாந்த் (33), பெங்களூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (25)ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ரவிக்குமார் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். யூடியூப்பில் முதல் முறையாக அவருக்கு வருமானம் கிடைத்தது. இதனால் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்தார். அப்போது தான் யூடியூப் வீடியோவை வைரலாக்க நினைத்தார். இதனால் அவர் ருக்மணி வசந்த் உள்பட பிற நடிகைகளின் ஏஐ 'டீப்-பேக்' வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றியது தெரியவந்துள்ளது.
அதேபோல் ரஞ்சித் குமார், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்துடன் பெங்களூரில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகவும், சந்திரகாந்த் ஆடிட்டராகவும் பணியாற்றி வருகின்றனர். இதில் ரஞ்சித் குமாருக்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்து வைத்தார். இதனால் அவர் பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் ஏஐ வீடியோவை உருவாக்கி உள்ளார். இவர்களிடம் 3 விலையுயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications