சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு கல்யாணமே நடந்தாச்சு.. ரோகிணி கொடுத்த அதிர்ச்சி.. பாவம் விஜயா! முத்து கண்ட காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial Today Episode) சிறகடிக்க ஆசை சீரியலின் 2026 ஜூலை 10ஆம் தேதிக்கான எபிசோடில், யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அதிரடியாக நடந்தது. அதாவது மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் நடக்காது கடைசி நேரத்தில் ஏதாவது சம்பவம் நடக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில் கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்து மனோஜ்க்கு கனகாவுடன் இரண்டாவது கல்யாணமே முடிந்துவிட்டது. என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம் வாங்க.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி கனகாவுக்கு மேக்கப் செய்து முடிக்கிறார். பிறகு கனகாவின் அம்மா வந்து என் பொண்ணு ரொம்ப அழகா இருக்குறா.. என்னுடைய வீட்டு விசேஷத்துக்கு எல்லாத்துக்கும் இனி நீ தான் வரணும் என்று சொல்கிறார்கள். பிறகு ரோகிணி அங்கிருந்து போகிறேன் என்று சொல்ல, அதற்கு கனகாவின் அம்மா இருந்து சாப்பிட்டுப் போகும்படி சொல்கிறார்.

ஆனால் தனக்கு இன்னொரு இடத்தில் ஆர்டர் இருப்பதாக அங்கு போகிறேன் என்று ரோகிணி கிளம்புகிறார். அந்த நேரத்தில் மனோஜின் நண்பரான சந்தோஷும் ரோகிணியை பார்த்து விடுகிறார். ரோகிணியும் அவரை பார்த்ததும் என்ன இங்க வந்து இருக்கீங்க என்று கேட்டதும், என்னுடைய நண்பனின் கல்யாணம் தான் என்று சந்தோஷ் சமாளிக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ஏமாந்த ரோகிணி

உடனே உங்க பாஸ் அஞ்சு லட்சம் ரூபாய் ரெடி பண்ணிட்டாரா என்று ரோகிணி கேட்டதும், கல்யாணம் முடிந்ததும் ரெடி பண்ணிடுவாரு என்று சந்தோஷ் உளறுகிறார். பிறகு சமாளித்து ரோகிணியை வெளியே அனுப்புகிறார். அடுத்ததாக சந்தோஷை முத்துவும் மீனாவும் பார்த்து விடுகின்றனர்.

அவர்களிடமும் இது என்னோட நண்பன் கல்யாணம்தான் என்று சந்தோஷ் சமாளிக்க, அதற்கு முத்து நீங்க மனோஜ்க்கு இந்த பொண்ணை தானே பார்த்தீங்க? மனோஜ் வேண்டான்னு சொன்னதால உங்க நண்பருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா? என்று கேட்டதும் ஆமாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பி மனோஜிடம் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.

கல்யாணத்திற்கு முன்பு பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறேன்.. சீரியல் நடிகர் ஓபன் பேச்சு.. வந்தாச்சு விவாதம்
உடனே மனோஜ் பயத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜோதிடர் மணப்பெண்ணின் அம்மாவை கூப்பிட்டு முத்துவும் ரவியும் மனோஜின் தம்பிங்க தான் என்று சொல்கிறார். உடனே கனகாவின் அம்மா இவங்க இங்கே இருந்தால் கல்யாணம் பண்ண முடியாது என்று முத்து மீனாவிடம் போய் கல்யாணம் நடக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் நீங்க இருக்கீங்களா என்று கேட்க, அதற்கு அவர்கள் இல்லை எங்களுக்கு வேலை இருக்கு என்று கிளம்புகிறார்கள்.

Siragadikka Aasai serial Vijay TV

மனோஜ் இரண்டாவது கல்யாணம்

பிறகு மீனாவின் பர்ஸ் வீட்டிற்குள் இருப்பதால் முத்து மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். ஆனால் இவர்கள் போய்விட்டார்கள் என்று நினைத்த மனோஜ் மாடியிலிருந்து கீழே மணகோலத்தில் வருகிறார். அந்த நேரத்தில் முத்து மீண்டும் அங்கு வர, ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார். பிறகு முத்து அங்கிருந்து போனதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்யாணம் நடக்கிறது.

சிறகடிக்க ஆசை: விபரீத முடிவு எடுத்த மனோஜ்! முத்து கண்டுபிடிக்கும் உண்மை? ரவுண்டு கட்டிய குடும்பத்தினர்
ஆனால் கடைசியில் தாலி கட்டப் போகும் நேரத்தில் கூட மனோஜ் நான் ரோகிணிக்கு துரோகம் பண்ணுறது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்கிறார். ஆனால் அவருடைய நண்பர் சந்தோஷும் தான் மனோஜ் மனசை மாற்றி கல்யாணம் பண்ணி வைக்கின்றனர். பிறகு கல்யாணம் முடிந்ததும் ஒரு கோவிலுக்கு போகலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

Siragadikka Aasai serial Vijay TV

பாவம் விஜயா

மறுபக்கத்தில் அதே கோவிலுக்கு விஜயாவும் பார்வதியுடன் வந்திருக்கிறார். தன்னுடைய மகன் மனோஜின் இரண்டாவது கல்யாணம் நல்லபடியாக நடக்கணும் என்று அந்த கோவிலில் விஜயா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மணகோலத்தில் மனோஜ் அங்கே நின்று கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைய எபிசோடில் யாரும் மனோஜை பார்க்கவில்லை. ஆனால் நாளைக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+