மறக்க முடியாத நாள்.. கூப்பிட கூப்பிட திரும்பி கூட பார்க்காமல் கரூரை விட்டு கிளம்பிய விஜய்

Subscribe to Oneindia Tamil

கரூர்: விஜய் சார்.. பதில் சொல்லிட்டு போங்க சார்.. பலர் பலியாகி இருக்காங்க.. பதில் சொல்லிட்டு போங்க சார்.. என்று செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் பதில் சொல்லாமல் போன நிலையில் இன்று அதே கரூருக்கு முதல்வராக விஜய் திரும்பி வந்துள்ளார்.

அன்று.. அலறல் சத்தமும் மரண ஓலமும் கரூரின் சாலை எங்கும் கேட்டுக்கொண்டு இருந்தது. தவெக தலைவர் விஜயைக் காண்பதற்காகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் காற்றில் கரைந்து கொண்டிருந்த தருணம் அது. ஆனால், அன்று அரசியல் மாற்றாக தன்னை முன்னிறுத்திய விஜய் என்ன செய்தார்?

Why is TVK Chief CM Vijay returning to Karur not sensitive as it seems

பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கக்கூட நிற்காமல், சம்பவ இடத்திலிருந்து அவரது சொகுசு வாகனம் மின்னல் வேகத்தில் மறைந்தது.

விஜய் நிற்க கூட இல்லை

அன்று இரவோ அல்லது அடுத்த நாளோ பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவோ, தவறைப் பற்றி பேசி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவோ விஜய் முன்வரவில்லை. ஒட்டுமொத்த கரூரே சுடுகாடாக மாறியிருந்த வேளையில், இரண்டு நாட்கள் கழித்து சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை மட்டும் பதிவிட்டுவிட்டு, தனது கடமை முடிந்தது என நகர்ந்தார்.

சிஎம் சார்.. என்று கோபமாக அப்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் மட்டும் விட்டுவிட்டு விஜய் கோபமாக அரசியல் பிரச்சார வேலைகளைப் பார்க்க தொடங்கிவிட்டார். கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கரூரை விட்டே ஓடி, தலைமறைவாகினர். முக்கியமாக இப்போதைய அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ராஜ் மோகன் என்று பலர் தலைமறைவாக இருந்தனர்.

இன்று... அதே விஜய் தமிழகத்தின் முதல்வர். விஜய் சார்.. பதில் சொல்லிட்டு போங்க சார்.. பலர் பலியாகி இருக்காங்க.. பதில் சொல்லிட்டு போங்க சார்.. என்று செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் பதில் சொல்லாமல் போன நிலையில் இன்று அதே கரூருக்கு முதல்வராக விஜய் திரும்பி வந்துள்ளார்.

இன்று 6000 போலீஸ் பாதுகாப்புக்கு இடையே, அதே கரூர் மண்ணில் அரசுப் பணி ஆணைகளை வழங்க வந்திருக்கிறார். ஆனால், இந்த ஒரு வருட காலத்தில் கரூரின் வடுக்கள் ஆறவில்லை. மாறாக, இன்றைய அவரது வருகை அந்த பழைய சம்பவத்தின் நினைவுகளை மீண்டும் கரூரின் நெஞ்சில் கிளறியுள்ளது.

விஜய் பயன்படுத்திய அதே வாகனம்

அன்று விபத்து நடந்த சில நிமிடங்களில், மக்களைக் கைவிட்டுவிட்டு தப்பியோடிய அதே தவெக பிரச்சாரப் பேருந்து தான், இன்று முதல்வர் விஜய்யின் சொகுசு மேடையாக அட்லஸ் கலையரங்கில் களமிறக்கப்பட்டு உள்ளது.

கரூர் வீட்டுப் பிள்ளைகள் மூச்சுத் திணறி இறந்த போது, இதே பேருந்தில் ஏறித்தானே அவர் கையை அசைத்தார்? விபத்து நடந்தவுடன் இறங்கி வந்து ஒரு நான்கு பேரைத் தூக்கியிருக்கலாம், அல்லது மருத்துவமனைக்கு ஓடி வந்து எங்களைப் பார்த்திருக்கலாம். எதையுமே செய்யாமல் அன்று கரூரை விட்டு சென்றவர்தான் விஜய்.

இன்று அதே பேருந்தோடு விஜய் அதே கரூருக்கு வந்துள்ளார். அன்று பத்திரிகையாளர்களை சந்திக்கக்கூட பயந்து, தலைவர்களையெல்லாம் தலைமறைவாக இருக்கச் சொல்லிவிட்டு, ஒரு ரீல்ஸ் வீடியோ மூலம் ஒட்டுமொத்த துயரத்தையும் கடக்க முயன்ற தவெகவின் அணுகுமுறை, இன்று முதல்வராக மாறிய பிறகும் மாறவில்லை என்பதைத்தான் இன்றைய ஏற்பாடுகள் காட்டுகின்றன.

சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் இந்த விவகாரத்தில் விஜய் செல்வதே தவறான முன்னுதாரணம். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கிடைத்த அனுமதியால் இன்று கரூருக்குள் நுழைந்திருக்கும் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதை ஒரு மிகப்பெரிய அரசியல் சாதனையாகக் காட்ட முற்படுகிறார்.

ஆனால், அன்று காட்டப்பட்ட அலட்சியமும், உணர்ச்சியற்ற போக்கும் கரூரின் ஒவ்வொரு குடும்பத்தின் மனச்சாட்சியிலும் ஆழப் பதிந்துள்ளது. காலம் மாறலாம், நாற்காலிகள் மாறலாம். ஆட்சிகள் வரும்.. போகும்!

ஆனால், அன்று விஜய் காட்டிய அந்த உணர்ச்சியற்ற மௌனமும், இன்று அவர் கொண்டு வந்திருக்கும் அதே பேருந்தும் கரூரின் வடுக்களை என்றும் ஆறவிடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+