கவுதம் கம்பீர் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர்.. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணம்?
பிரிஸ்டால்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து அணியிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணம் என்ற விவாதம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 49 பந்துகளில் 80 ரன்களை எடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 79 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். வெற்றிக்கு பின் ஹாரி ப்ரூக் பேசிய வார்த்தைகள் இந்திய ரசிகர்களை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்திய அணியை வீழ்த்துவது எப்போதும் ஜாலியான விஷயம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அயர்லாந்து அணியிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரில் தோல்வி அடைந்தது. தற்போது இங்கிலாந்து அணியிடமும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றது முதல் இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.
இதனிடையே இந்திய அணியின் தோல்விக்கு யார் காரணம் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அதில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு மீதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் பலவீனமாக பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுமே அமைந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரைத் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் இங்கிலாந்து ஆடிய அனுபவம் இல்லை.
அதேபோல் பவுலிங்கில் அனைவருமே புதியவர்கள் என்று சொல்லிவிடலாம். என்னதான் அர்ஷ்தீப் சிங்கிடம் அனுபவம் இருந்தாலும், அவரின் பவுலிங்கில் கடந்த சில மாதங்களாகவே ஸ்விங் இல்லை. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றான சரியான ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை.
இன்னொரு பக்கம் குல்தீப் யாதவ் இடத்தை நிரப்ப முடியவில்லை. அக்சர் படேலிடம் பழைய பேட்டிங் ஃபார்ம் இல்லை. இது அனைத்தையும் டி20 உலகக்கோப்பையின் போது இந்திய அணி நிர்வாகம் சமாளித்திருந்தது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட அணியில் இது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. இதனால் இந்திய டி20 அணிக்கு இதுவொரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications