அடுத்த 3 வருஷம் முக்கியம்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ 2.5 லட்சத்தை தாண்ட போகிறது.. வல்லுநர் வார்னிங்
சென்னை: பொருளாதார நிபுணர் எட் யார்டெனி, தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் $5,000 ஆகவும், 2028-ஆம் ஆண்டுக்குள் $10,000 ஆகவும் (சுமார் ₹8,87,000) உயரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இது 10 கிராம் தங்கத்தின் விலை ₹3.1 லட்சமாக உயரும் என்பதைக் குறிக்கும், ஏனெனில் ஒரு அவுன்ஸ் என்பது 28 கிராமுக்குச் சமம். அதாவது ஒரு சவரன் கிட்டதட்ட ரூ.2.5 லட்சம் ஆக உயரும்.
மத்திய வங்கிகள் தங்கள் சர்வதேச கையிருப்புகளில் தங்கத்தின் சதவீதத்தை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று யார்டெனி சுட்டிக்காட்டினார். இது தங்கத்தின் மீதான உலகளாவிய தேவையைத் தூண்டி, அதன் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கணித்துள்ளார்

தங்கம் விலை எச்சரிக்கை
பொருளாதார நிபுணர் எட் யார்டெனி வெளியிட்டு உள்ள எச்சரிக்கையில், தங்கம் விலை 2028-ம் ஆண்டுக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு $10,000 (சுமார் ₹8.89 லட்சம்) என்ற உச்சத்தை எட்டக்கூடும் என அவர் கணித்துள்ளார். இந்த ஏற்றம், தற்போதைய போக்கு தொடர்ந்தால் 150% வளர்ச்சியாக இருக்கும்.
தங்கம் தனது முந்தைய கணிப்புகளைக் காட்டிலும் விரைவாக உயர்ந்ததையடுத்து, இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.
டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது 100% வரிகளை விதித்து, இந்தியா மீது 50 வரிகளை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல் அமெரிக்க மென்பொருள் ஏற்றுமதிக்கான வரம்புகளை டிரம்ப் அறிவித்து உள்ளார். இதனால் உலக மார்க்கெட்டில் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000-ஐ தாண்டி மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக மோதலால் டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. இதன் விளைவாக சந்தைகள் சரிந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நாடி உள்ளனர்.
தங்கம் விலை - யார்டெனி
தங்கம் ஏன் அவுன்ஸ் ஒன்றிற்கு $10,000-ஐ தொடும் என யார்டெனி கருதுகிறார் என்பதற்கு பல காரணங்களை அவர் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார். பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாரம்பரிய பாதுகாப்பு அம்சமாக தங்கம் செயல்படுகிறது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மந்தநிலை, மற்றும் அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற உலகளாவிய கவலைகளின் பிரதிபலிப்பே இந்த தங்கம் விலை உயர்வுக்கு காரணம்
தங்கம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. டாலர் அல்லது பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்று மக்கள் பயப்படும்போது, அவர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள்.
இந்தத் தங்க விலை உயர்வில் சீனாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டிலிருந்து அந்நாட்டின் மத்திய வங்கி தனது தங்க இருப்புக்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை சீனா குறைத்து வருகிறது, அவர் சுட்டிக்காட்டினார்.
டாலர் மீதான மோகம் குறைந்து வருகிறது. டாலர் மதிப்பும் சரிந்து வருகிறது. நாங்கள் தற்போது 2026-ல் அவுன்ஸ் ஒன்றிற்கு $5,000-ஐ இலக்காகக் கொண்டுள்ளோம். தற்போதைய பாதை தொடர்ந்தால், இந்த பத்தாண்டின் முடிவுக்கு முன்னரே அவுன்ஸ் ஒன்றிற்கு $10,000-ஐ அடையலாம் என்று யார்டெனி கூறி உள்ளார். 2023 பிற்பகுதியில் இருந்து தங்கத்தின் போக்கைக் கருத்தில் கொண்டால், 2028-29க்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு $10,000 என்ற மைல்கல்லை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications