முடங்கியது அமெரிக்க அரசு.. நிலைமை கைமீறி போய்விட்டது.. தங்கத்தை நோக்கி ஓடுங்க.. ஒரே பாதுகாப்பு!
நியூயார்க்: சமீபத்திய ஆண்டுகளில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க வரிகள் போன்ற காரணங்கள் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அமெரிக்க அரசு முடங்கியதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக, வேகமாக உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, செனட் அவை அங்கு தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்கத் தவறியது. இதனால் தற்போது அங்கு அரசு முடங்கி உள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், இருதரப்பு ஆதரவு தேவைப்பட்ட இந்த மசோதா 55-45 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நள்ளிரவு காலக்கெடுவுக்குள் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாததால், அக்டோபர் 1, புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.
அத்தியாவசியமற்ற அரசு சேவைகளை நிறுத்த இதன் மூலம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது போக விமானப் பயணத்தைத் தடைசெய்யலாம், முக்கியமான பொருளாதார அறிக்கைகளை தாமதப்படுத்தலாம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சிறு வணிக கடன் அலுவலகங்களை மூடலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியமில்லாத விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் விலை உயரும்
அமெரிக்க அரசு முடங்கியதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக, வேகமாக உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகவே அமெரிக்காவில் இன்று அதிகாலை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் மிக சிறந்த மாதமாக இது மாறி உள்ளது.
தங்கத்திற்கு சிறப்பான மாதம்
அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 0.2% உயர்ந்து $3,842.76 ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை தங்கம் 11.4% அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் 2011க்குப் பிறகு மிகச் சிறந்த மாதமாக உருவெடுத்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.4% அதிகரித்து $3,872 ஆக வர்த்தகமாயின.
அரசியல் மற்றும் நிதி நிச்சயமற்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. குறைந்த வட்டி விகித சூழல்களில் தங்கம் மேலும் சிறப்பாக செயல்படும். தற்போது இந்த இரண்டு சூழலும் நிலவுகிறது என்பதால் தங்கத்திற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்
கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 50% உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த உயர்வு 112% ஆக உள்ளது. தங்கத்தின் மீதான தேவை குறையாமல் இருப்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் விலை ரூ.2 லட்சத்தைத் தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்விற்கு கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்காவின் உலகளாவிய வரிகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல காரணிகள் பங்களித்துள்ளன. கடந்த ஒரு வருடமாக நிஃப்டி 50 போன்ற பங்குச் சந்தைகள் கணிசமான வருமானத்தை வழங்காத சூழலில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது அதன் விலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
கடந்த காலத்தைப் பார்க்கும்போது, 2005ல் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.7,000 ஆக இருந்தது. இது 2010ல் ரூ.18,500 ஆகவும், 2015ல் ரூ.26,300 ஆகவும் உயர்ந்தது. செப்டம்பர் 18, 2025ல் ரூ.1,10,000ஐ தாண்டியுள்ளது. இது தங்கத்தின் நீண்டகால வலிமையைக் காட்டுகிறது. அடுத்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 15-20% அதிகரிக்கக்கூடும். அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு முடிவுகளைப் பொறுத்து இது அமையும். மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் மாறிவரும் முதலீட்டு நிலப்பரப்பு ஆகியவை அடுத்த 1-5 ஆண்டுகளில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.












Click it and Unblock the Notifications