Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் தொலைந்தால் இன்சூரன்ஸ் மூலம் நகைகளை பாதுகாப்பது எப்படி? தங்கம் திருடு போனால் 95% வரை இழப்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் மீதான இந்தியர்களின் பற்று என்பது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது... அதுவும் இப்போதுள்ள பொருளாதார நிச்சயமற்ற சூழலில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும் விற்பனை குறைந்தபாடில்லை. அப்படியே தங்கம் வாங்கினாலும் அதை பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது... ஒருவேளை நகைக் கடையில் வாங்கிய தங்கம் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ அதற்கான இழப்பீட்டைப் பெற முடியுமா? அதை இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்..!!

சமீப காலமாகவே தங்கம் விலை பீதியை தந்து கொண்டிருக்கிறது.. இதுபோக தங்க நகை கொள்ளை சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன..

Gold Jewelry Insurance Benefits

வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் நகைகளுக்கு கூட முழுமையான பாதுகாப்பு இருப்பதாக சொல்ல முடியாது. இதுபோன்ற சூழலில், நகைக் கடையில் வாங்கிய தங்கம் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ அதற்கான இழப்பீட்டை பெறுவதற்கு உதவுவதுதான் தங்க நகை காப்பீடு..

தங்க நகை - லாக்கர் பாதுகாப்பு

நாம் வாங்கும் தங்க நகைகளுக்கு காப்பீடு செய்திருப்பது மிகவும் நல்லது.. வாகனம் மற்றும் வீட்டிற்கு காப்பீடு செய்வது போல, இன்று பல முன்னணி நகைக் கடைகள் நாம் வாங்கும் நகைகளுக்கு இலவசமாகவே காப்பீடு வசதியை வழங்குகின்றன. மலபார் கோல்ட், தனிஷ்க் போன்ற புகழ்பெற்ற நகை நிறுவனங்கள் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச காப்பீடு வழங்குகின்றன.

இந்த காப்பீடு மூலம் தங்க நகைகளுடன் சேர்த்து, வைரம், வெள்ளி மற்றும் நவரத்தின நகைகளுக்கும் சில நிறுவனங்களில் பாதுகாப்பு பெற முடியும்.

95 சதவீதம் வரை இழப்பீடு

வீட்டில் கொள்ளை அடிக்கப்படுவது, சாலையில் நகை பறிப்பு, தீ விபத்து, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் வங்கி லாக்கரில் இருந்து களவாடப்படுவது போன்ற காரணங்களால் நகைகளை இழந்தால், காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளைப் பொறுத்து, நகையின் மதிப்பில் 90% முதல் 95% வரை இழப்பீடாகப் பெற முடியும்.

குறிப்பாக பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களுக்கு பல காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன; ஆனால் கலவரம், பயங்கரவாதம் போன்றவை சில குறிப்பிட்ட பாலிசிகளில் அல்லது கூடுதல் நிபந்தனைகளுடன் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும்..

தொலைந்த தங்க நகைகள்

இருப்பினும், கவனக்குறைவால் நகையை எங்காவது வைத்து மறந்துவிடுவது, போர் காரணமாக ஏற்படும் இழப்புகள் போன்றவற்றுக்கு பொதுவாக இந்தக் காப்பீடு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

நகைக்கடைக்காரர்கள் வழங்கும் இலவச காப்பீடு பொதுவாக ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லும். இந்த ஓராண்டு காலம் முடிந்த பிறகு, சில நகைக் கடைகளில் மட்டும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி அந்தக் காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆனால், சில கடைகளில் மட்டுமே இந்த புதுப்பித்தல் வசதி உள்ளது. எனவே நகை வாங்கும்போதே அதன் காப்பீடு காலாவதியாகும் காலம் மற்றும் புதுப்பிக்கும் வசதி குறித்துக் கேட்டு தெரிந்துகொள்வது அவசியமாகும். பலருக்கு இத்தகைய வசதி இருப்பது தெரியாததால், நகை திருடு போகும் நேரங்களில் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.

தங்க நகை காப்பீடு

உங்களது நகைகள் திருடு போனால் அல்லது காணாமல் போனால் உடனடியாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து எப்ஐஆர் காப்பியை பெற வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இழப்பீடு கோரும் விண்ணப்பத்துடன் நகையின் அசல் ரசீது, போட்டோக்கள், காப்பீட்டு ஆவணம், FIR நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனம் இந்த ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பிறகு, இழந்த நகைக்கான உரிய தொகையை வழங்கும். விலைமதிப்பற்ற தங்கத்தை சேமிக்கும் அதே வேளையில், அதை முறையாகக் காப்பீடு செய்வது நம் முதலீட்டிற்கு உண்மையான பாதுகாப்பைத் தரும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+