பேரைக் கேட்டாலே சும்மா அதிரப் போகுது.. தங்கத்தின் விலை டபுள் ஆகப் போகுது! நிபுணர் கொடுத்த வார்னிங்
சென்னை: உலகம் முழுவதும் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய சாதனைகளை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க பங்கு சந்தை நிறுவனம் ஜெஃப்ரிஸ் (Jefferies) நிறுவனத்தின் தலைமை அதிகாரியான க்ரிஸ் வுட், தங்கத்தின் நீண்டகால விலை குறித்து மிகப்பெரிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தங்கம் விலை இருமடங்காகும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட அவற்றின் காரணமாக தங்கம் விலை ஏறுமுகமாக இருக்கிறது. சிறிது விலை இறங்கினாலும், அடுத்த நாள் அதனை விட அதிகமாக விலை உயர்கிறது.

கடந்த 1980ஆம் ஆண்டில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு வெறும் 850 அமெரிக்க டாலராக இருந்தது. அதற்குப் பிறகு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், அமெரிக்காவின் பணவியல் கொள்கைகள், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மெதுவாக உயரத் தொடங்கியது.
தங்கம் விலை உயர்வு
இந்த வாரம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவை அடுத்து தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,700 என்ற சாதனை உச்சத்தை தொட்டது. எனினும் வட்டி குறைப்புகள் ஏற்கனவே சந்தையில் எதிர்பார்க்கப்பட்டதால் சிறிய அளவில் தான் சரிவு ஏற்பட்டது. இருந்தாலும் தங்கத்தின் விலை நீண்டகால போக்கு இன்னும் உயர்வை நோக்கியே பயணிக்கும் என்கின்றனர் உலக அளவிலான பொருளாதார நிபுணர்கள். இந்நிலையில், தங்கம் விலை இருமடங்காகும் எனவும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெஃப்ரிஸ்
இதுதொடர்பாக, ஜெஃப்ரிஸ் (Jefferies) நிறுவனத்தின் தலைமை அதிகாரியான க்ரிஸ் வுட் கருத்துப்படி, 1980 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை அமெரிக்கர்களின் ஒருவர் செலவிடக்கூடிய வருமானத்தில் சுமார் 10% மதிப்பை கொண்டிருந்தது. அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டால், தங்கம் இன்று 6,571 டாலர் வரை செல்ல வேண்டும். அதனால் தான் அவர் 6,600 டாலர் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார்.
க்ரிஸ் வுட் கணிப்பு
1950ஆம் ஆண்டு தங்கத்தின் விலை 850 டாலராக இருந்த நிலையில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், அமெரிக்காவின் பண கொள்கை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை மெதுவாக உயர தொடங்கியது. அப்போது பேசிய கிரிஷ் வுட் தங்கத்தின் விலை 2002 ஆம் ஆண்டு 3400 டாலர் வரை உயரும் என கணித்திருந்தார் 2005இல் அதை 3700 என திருத்தி இருந்தார். அதற்குப் பிறகு 2016 இல் தங்கத்தின் விலை 4200 டாலர் வரை போகும் என கூறி இருந்தார். அவரது கணிப்பு பலிக்க தொடங்கியது.
உலக தங்க விலை
கொரோனா காலத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் நெருக்கடியால் தங்கத்தின் விலை 5500 டாலருக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025-ல் தங்கத்தின் விலை வரும் காலங்களில் 6600 டாலர் வரை உயரும் என கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில ஆண்டுகளில் உண்மையிலேயே தங்கத்தின் விலை 6600 வரை சென்றால் உலக பொருளாதாரத்திலும் இந்தியாவின் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்திய தங்கம் விலை
உலக சந்தையில் தங்க விலை தொடர்ந்து உயரும் போது, இந்தியாவில் தங்கம் வாங்கும் பழக்கமுள்ள பொதுமக்கள் மற்றும் நகைக்கடை வியாபாரிகளுக்கு பெரும் தாக்கம் ஏற்படும். திருமணம், விழாக்கள் போன்ற சமயங்களில் தங்கம் வாங்கும் போது கூடுதல் செலவாகும். ஆனால், ஏற்கனவே தங்கம் வைத்திருப்போருக்கு இது நல்ல செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு மெல்ல மெல்ல தங்கம் வாங்குவது பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications