காலையில் ஷாக் கொடுக்க காத்திருக்கும் தங்கம்.. சர்வதேச சந்தையில் நடந்த தலைக்கீழ் மாற்றம்!
சென்னை: வளைகுடா போர் காரணமாக இடையில் தங்கத்தின் விலை ஓரளவு உயர்ந்திருந்தது. இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை சட்டென குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது.
காலையில் குறைந்திருந்த தங்கம், இரவில் 41 டாலர்கள் உயர்ந்துள்ளது. வெள்ளி அவுன்ஸுக்கு 1 டாலர் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்று தங்க விலை குறைவாக இருந்தாலும், சர்வதேச உயர்வின் தாக்கம் நாளை முதல் இந்திய சந்தையிலும் தெரியும்.

தற்போது தங்கம் சர்வதேச அளவில், 1 அவுன்ஸ் (28 கிராம்) 41 டாலர்கள் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக 1 அவுன்ஸ் ₹4,09,716க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை,
- நேற்றைய விலை - ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனையானது
- ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ரூ.14,200க்கு விற்கப்பட்டது
- இன்றைய தினம் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
- 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,000க்கு விற்பனையாகிறது
- வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.260க்கு விற்பனையாகிறது
தற்போது சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால், நாளை காலை இந்தியாவில இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து நாட்களில் நிலைமை ஸ்மூத்தாக இருந்தால் தங்கம் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
