தவெக மாதிரி தான் தங்கமும்.. இன்னிக்கு ரேட் அதிகமாயிருச்சு! ஆனால்..கடைசியில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
சென்னை: போர் பதற்றம் உள்ளிட்டவை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு உயர்ந்தாலும், தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை நோக்கி நகரும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பது, பணவீக்கம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஈர்ப்பு குறைந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இன்றைய நாளின் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் ( 31.1035 கிராம்) தங்கம் சுமார் 4,567 டாலர் (ரூபாயில் 4,34,958) என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய விலையில் இருந்து ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த மாதம் முழுவதும் இருந்த நிலவரத்தை பார்க்கும்போது சுமார் 2 சதவீதத்திற்கும் மேல் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

தங்கம் விலை ஏன் சரிவை சந்திக்கிறது என்ற கேள்விக்கு முக்கிய காரணமாக எண்ணெய் விலை உயர்வே கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, உலகளவில் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.
தங்கம் விலை
இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பணவீக்கம் அதிகரித்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைப்பதற்குப் பதிலாக உயர்த்தவே முயற்சிக்கும்முடியும். இதுவே தங்கத்தின் விலை உயர்வுக்க் தடையாக அமைகிறது. பொதுவாக தங்கம் பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் சூழலில், வட்டி தராத முதலீடான தங்கம் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
விலை வீழ்ச்சி
இதனால் தங்கத்தின் விலை உயர்வுக்கு பதிலாக சற்றே விலை வீழ்ச்சியை சந்திப்பது வழக்கம் தான். அதே நேரத்தில், சில முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் அதை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த விலையில் வாங்கி வைக்கும் மனோபாவம் சந்தையில் ஒரு அளவிற்கு தங்கத்தின் விலைக்கு சாதகமாக உள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் எதிர்காலத்தில் குறையலாம் என்ற நம்பிக்கையும் சந்தையில் ஓரளவு நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் விலை
ஆனால் எண்ணெய் சந்தையில் நிலவும் பதற்றம் தொடர்ந்து கவலைக்குரியதாகவே உள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறையலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 124 டாலர் அளவைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். அமெரிக்க மத்திய வங்கியும் சமீபத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தாலும், பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
வெள்ளி, பிளாட்டினம்
இதனால் இந்த ஆண்டில் வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. மாறாக எதிர்காலத்தில் வட்டி உயர்வு கூட ஏற்படலாம் என்ற கணிப்பும் உருவாகியுள்ளது. தங்கத்துடன் சேர்த்து வெள்ளி, பிளாட்டினம், பாலடியம் போன்ற மற்ற மதிப்புமிக்க உலோகங்களும் சிறிய அளவில் உயர்ந்துள்ளன. ஆனால் அவற்றின் விலையும், தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை நோக்கி செல்கின்றன.
முதலீட்டாளர்கள்
மொத்தத்தில் பார்க்கும்போது, தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், எண்ணெய் விலை, பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற காரணிகள் அதன் எதிர்கால விலையை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனால், தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் சந்தையை கவனித்து வருகின்றனர்.
-
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications