டப்புன்னு சரிய போகுது தங்கம் விலை.. கோல்டு வாங்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய மேட்டர்!
சென்னை: தங்கம் விலை கடந்த ஆண்டில் இருந்ததை விட தற்போது தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஜனவரியில் ரூ.57 ஆயிரம் என்று இருந்தது தற்போது ரூ.1,12,000 என உயர்ந்து இருக்கிறது. ஒரே ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவாக ரூ.55 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது என்றும், இது எப்போது வேண்டுமானாலும் உடையலாம் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
தங்கம் விலை கடந்த ஆண்டில் இருந்தே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக உயர்வு இருந்தது. தினம் தினம் மளமளவென தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தங்கம் விலை ரூ.1.28 லட்சம் என்ற அளவில் புது வரலாற்று உச்சம் தொட்டது.

தங்கம் விலை உயர்வு
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக இருந்தும் முதலீட்டாளர்கள் அதன் மீது அதிக அளவில் முதலீடு செய்ததும் தங்கம் விலையின் இந்த வரலாறு காணாத விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பின்னர் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது.
ஈரான் அமெரிக்கா போர் தொடங்கியதில் இருந்து இந்த விலை மேலும் குறைந்தது. இதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,12,000-ஆக இன்றைய நிலவரப்படி விற்பனையாகி வருகிறது. இதற்கிடையே, தங்கம் விலை தொடர்பாக ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை பற்றிய முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2026 பணவியல் கொள்கை
2026 பணவியல் கொள்கை ஆய்வறிக்கையில் தங்கம் விலை பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:- சர்வதேச அளவில் நிலவும் புவிசார் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் தங்கம் விலை கடந்த ஆண்டு கடுமையாக உயரந்தது.
குறுகிய கால கட்டத்தில் தங்கம் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது. தங்கம் விலை உயர்வின் வேகமும் அதன் தொடர்ச்சியும் ஒரு விலைக்குமிழி உருவாதற்கான சாத்தியக்கூறுகளை உணர்த்தியுள்ளன. இதுபோன்ற விலை குமிழிகளை முன்கூட்டியே கண்டறிவது கொஞ்சம் கடினமான ஒன்று என்றாலும் ஆய்வுகளை வைத்து பார்க்கும் போது தங்கத்தின் விலை உயர்வானது புள்ளி விவர ரீதியாக ஒரு வெடிக்கும் தன்மையை எட்டியுள்ளது.
திடீர் சரிவு உண்டாகும்
தங்கம் விலையில் ஏற்படும் திடீர் சரிவு மார்க்கெட்டில் பெரும தள்ளாட்டத்தை ஏற்படுத்தும். இது முதலீட்டாளர்களை மற்ற நிதி சொத்துக்களை விற்க தூண்டுவதுடன் பங்குகள், பத்திரங்கள் மற்றும் கரன்சி சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி மொத்த சந்தை உணர்வையும் மாற்றக்கூடும். இதனை வைத்து ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கடந்த ஆண்டு தங்கம் விலை உயர்ந்த விதம் ஒரு விலைக்குமிழி உருவானதற்கு இணையாக உள்ளதுடன் சந்தையின் அதீத உற்சாகம் மற்றும் அடிப்படை அபாயங்கள் அதிகரித்துள்ளதேயே காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications