தங்க நகையை அடகு வச்சு லோன் எடுக்கவே முடியாது போலயே.. அதிகம் பாதிக்கப்பட போவது தமிழ்நாடுதான்! எப்படி?
சென்னை: தங்க நகை அடகு விதிகளில் மாற்றங்களை செய்து ஆர்பிஐ வெளியிட்டு இருக்கும் வரைவு விதிகளால் அதிகம் பாதிக்கப்பட போவது தென்னிந்திய மாநிலங்கள்தான். முக்கியமாக தமிழ்நாடுதான்.
தங்க நகை லோன் வழங்குவதற்கு ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில், நகையை அடகு வைத்து கடன் வாங்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறும்.

இது நேரடியாக தென்னிந்தியாவை அதிகம் பாதிக்கும். உதாரணமாக தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்கும் குடும்பங்கள் தென்னிந்தியாவில்தான் அதிகம் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன. ஏனென்றால் தமிழ்நாட்டில் தங்கம் வைத்துள்ள பெண்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் அவசரத்திற்கு அடகு வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
1 தெலுங்கானா 17.5%
2 தமிழ்நாடு 13.2%
3 கேரளா 12.3%
4 கர்நாடகா 11.4%
5 ஆந்திரப் பிரதேசம் 10.9%
6 ஒடிசா 10.0%
7 குஜராத் 9.3%
8 ராஜஸ்தான் 9.2%
9 மகாராஷ்டிரா 8.3%
10 மேற்கு வங்காளம் 7.8%
இதுதான் தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்கும் குடும்பங்களின் சதவிகிதம் மாநில வாரியாக. இதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆர்பிஐ விதிகளால் தமிழ்நாடு இனி நேரடியாக பாதிக்கப்படும்.
ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications