தங்க நகை கடன், அடகு வைக்க போறீங்களா? ஆர்பிஐ கொண்டு வந்த புதிய விதி.. கந்து வட்டிக்கு போகும் கொடுமை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகை அடகு விதிகளை ஆர்பிஐ கடுமையாக்கி உள்ள காரணத்தால் மக்கள் நகை அடகு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலரும் கந்துவட்டி கடைக்காரர்களை அணுகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதனால் தங்க லோன் வழங்குவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

நகை கடன்

வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

RBI new guidelines on gold loans are strict people may go towards unoragnised lenders

தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

சிக்கலான விதிகள்

தங்க நகை அடகு விதிகளை ஆர்பிஐ கடுமையாக்கி உள்ள காரணத்தால் மக்கள் நகை அடகு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலரும் கந்துவட்டி கடைக்காரர்களை அணுகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான விதிகள் தங்க நகை கடனில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கும். அதோடு புதிய நகை கடன் நிறுவனங்கள் இந்த துறையில் உஷாராக இருக்க சரியாக விதிகளை பின்பற்ற இந்த புதிய விதிகள் காரணமாக இருக்கும். ஆனால் இதனால் நகை கடன்கள் வழங்குவது குறையலாம் என்று எச்சரித்துள்ளார்.

தங்க நகை அடகு

ஆர்பிஐ வெளியிட்ட விதிகளின்படி, கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும். தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோவிற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் வங்கிகள் அல்ல.. நகை அடகு கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது இவர்கள் நகைகளை பராமரிக்க முடியாமல் போகலாம். இனி நகைகளை அடகிற்கு எடுக்க முடியாமல் போகலாம். இன்னும் சில நகை அடகு கடைகள் இந்த விதிகள் காரணமாக மொத்தமாக மூடப்படும் நிலை கூட ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+