உலக வரலாற்றில் முதல்முறை.. சர்வதேச மார்க்கெட்டை திணற வைத்த தங்கம்.. 1 கிராமாவது வாங்கிடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது.

ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3235ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3238ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.72 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது. தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Spot Gold hits 3235 for an ounce a new all-time record high

வர்த்தக போர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.

அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். அதே சமயம் சீனா மீதான வரிகளை அவர் நிறுத்தவில்லை. சீனா மீது வரிகள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

உச்சம் விலை

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இது உலகளாவிய அளவில் வர்த்தகத்தை மிக மோசமாக்கி உள்ளது. அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்து இருந்தார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தார். இதையடுத்து கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 84 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து சீனாவின் பொருட்களுக்கு 400% வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Take a Poll


உலக தங்க கவுன்சில் சிஇஓ

இந்த நிலையில்தான் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். உலகின் அளவில் கடன் $76 டிரில்லியனாக உள்ளது, மேலும் $13 டிரில்லியன் கடன் வாங்கப்பட்ட உள்ளது. கட்டணங்களும் பணவீக்கமும் பணத்தின் மதிப்பை குறைக்கும். இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். தங்கம் மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி.

தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடு. தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும். வேறு பாதுகாப்பான வழி இருக்க முடியாது. உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை.. என்று அவர் கூறி உள்ளார்.

டாலருக்கு ஆப்பு

இந்த மோதலின் ஒரு கட்டமாக சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால் அமெரிக்க டாலர் கொள்முதலைக் குறைக்குமாறு அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் டாலர் மதிப்பு வேகமாக சரியும். டாலரை நம்பி உள்ள மற்ற வர்த்தகங்கள் மிக வேகமாக சரியும்.

சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது. இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். சீனாவின் யுவான் இந்த மாதம் இதுவரை சுமார் 1.3% இழந்துள்ளது. நேற்று மட்டும் ஒரு டாலருக்கு 7.35 யுவான் சரிந்தது. இதை தடுக்கவே டாலர் கொள்முதல் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது.

சீனா - அமெரிக்க வர்த்தக போரால் யாருக்கு லாபம்?

சீனாவை விட அமெரிக்காதான் சீனாவை அதிகம் நம்பி இருக்கிறது. சீனா அமெரிக்காவை நம்பி இல்லை. அமெரிக்கா சீனாவின் பொருட்கள் இன்றி இயங்க முடியாது. சீனாவின் உற்பத்தி அந்த அளவிற்கு அதிகம் உள்ளது. இதனால் சீனாவின் பொருட்கள் இன்றி அமெரிக்கா கடுமையாக பாதிக்கும். அதோடு சீனா அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வர்த்தக போரின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+