கண்டிப்பாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தொடப்போகுது.. சொன்னது யாருன்னு பாருங்க! செம ட்விஸ்ட்
சென்னை: கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்தில் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா.. 1 லட்சம் ரூபாயை அடையுமா அல்லது சரியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் MCX தங்கத்தின் விலை சுமார் 25% உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த 5 வருடங்களில் மட்டும் 10 கிராமுக்கு ₹44,906 இலிருந்து ₹95,239 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 17 ஏப்ரல் 2020 முதல் 17 ஏப்ரல் 2025 வரை தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 110%க்கும் அதிகமாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,758 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,945 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,405 ஆகவும் உள்ளது. இப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3245ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3242ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.75 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே, தங்கத்தின் விலையில் இப்போதைக்கு சரிவு ஏற்படவே வாய்ப்பு இல்லை. தங்கத்தின் விலை கண்டிப்பாக 1 லட்சத்தை தொடும். தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரம் விலை என்ன?
தங்கத்தின் விலை அடுத்த வாரம் அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா - அமெரிக்காவின் வர்த்தக போர் உச்சம் அடைந்த நிலையில் அது அடுத்த வாரம் மார்க்கெட்டில் எதிரொலிக்கும். ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு $3300 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது மூன்றரை பவுன் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 2.78 லட்சம் ரூபாய் ஆகும்.
கிட்டத்தட்ட அடுத்த வாரம் மட்டும் 1000-2000 வரை மூன்றரை பவுன் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.
தங்கம் விலை ஏன் உயரும்?
தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது. இதனால் அடுத்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 2000க்கும் மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications