தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் ஏன்? பின்னணியில் இருக்கும் 3 காரணங்கள்.. அடுத்து என்ன நடக்கும்
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், ஆரம்பத்தில் விலை அதிகமாக இருக்கிறதே என நினைத்து வாங்காமல் விட்டவர்கள் கூட தற்போது அப்போதே வாங்கியிருக்கலாம் என கவலைப்படும் அளவுக்கு தங்கம் விலையானது இன்று புதிய உச்சத்தை தொட்டு நிற்கிறது. வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்வதற்கு பின்னணியில் 3 காரணங்கள் சொல்லப்படுகிறது. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜெட் வேகம், ராக்கெட் வேகம் இல்லை மின்னல் வேகத்தில் தங்கம் விலை உயர்கிறது என சொல்லும் அளவுக்கு மிகக் கடுமையாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது.

இன்றைய தங்கம் விலை எவ்வளவு
விலை அதிகமாக இருக்கிறதே என நினைத்து வாங்காமல் விட்டவர்கள் கூட வாங்காமல் விட்டுவிட்டோமே என கவலைப்படும் அளவுக்கு தங்கம் விலையானது தினம் தினம் உச்சத்தை தொட்டு நிற்கிறது. அதிலும் இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே பயணிக்கிறது. கடந்த 5-ந் தேதி வரை அதிகரித்து நகை பிரியர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. மறுநாளில் இருந்து 9-ந்தேதி வரை குறைந்திருந்தது.
இதனால் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், மீண்டும் தங்கம் விலையானது ஏறத் தொடங்கியிருக்கிறது. இப்படியாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த 12-ந் தேதியில் இருந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் நேற்று காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலை ஏற்றம் கண்டது. இன்று தங்கம் விலை பவுனுக்கு 640 ரூபாய் குறைந்து சற்று நிம்மதி தந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.8,230க்கும், ஒரு பவுன் ரூ.65,840 க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதற்கான டாப் சில காரணங்களை பார்க்கலாம்.
பொருளாதார பலவீனம் மற்றும் பணவீக்கம்
பொருளாதாரத்தில் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவுவது மற்றும் அதிக பணவீக்கம் ஆகியவை தங்கம் விலை மேலும் உயர்வதற்கு முக்கியமான காரணியாக உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஆகியவற்றால் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்துகிறார்கள். பலவீனமான பொருளாதார வளர்ச்சி, புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் விலை உயர்வு ஆகியவை காரணமாக தங்கம் பாதுகாப்பான சொர்க்கபுரியாக திகழ்கிறது.
அமெரிக்கா வர்த்தக கொள்கையின் தாக்கம்
டொனால்டு டிரம்பின் ஆக்ரோஷமான வரி விதிப்பு கொள்கையால் பங்குச்சந்தையில் தாக்கம் முதல் பொருளாதார நிச்சயமற்ற சூழல் வரை அனைத்தும் அதிகரித்து வருகிறது. கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா போன்ற நாடுகளால் சர்வதேச வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ளது. கணிக்க முடியாத வர்த்தக சூழல் ஆகியவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு உயர்ந்துள்ளது.
நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
இது விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்பை கடுமையாக்கினால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பது சந்தை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications