ஆசை ஆசையாக வாங்கியவர்களுக்கு.. தங்க நகை, அடகு கடைகளில் காத்திருந்த ஆப்பு.. என்னங்க நடக்குது?
சென்னை: தங்கத்தின் விலைக்கு இணையாக வெள்ளியின் விலை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பலரும் தங்கத்தோடு சேர்த்து வெள்ளியும் வாங்கி வருகிறார்கள். ஆனால் வெள்ளி வாங்கிய பலருக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி நிலை நிலவரம் என்ன?
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,797 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,980 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,435 ஆகவும் உள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,11,000 ஆகவும் உள்ளது.

தங்கத்தின் விலைக்கு இணையாக வெள்ளியின் விலை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பலரும் தங்கத்தோடு சேர்த்து வெள்ளியும் வாங்கி வருகிறார்கள். ஆனால் வெள்ளி வாங்கிய பலருக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
என்ன நடக்கிறது?
1. வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000 ஆக இருந்தாலும் கூட.. அதன் விற்பனை விலை பல இடங்களில் குறைந்து விடுகிறது. அதாவது விற்பனை செய்யும் போது இதே விலைக்கு கடைகள் எடுக்க மறுக்கின்றன.
2. வெள்ளி என்றாலே அதை கொஞ்சம் குறைவாக பார்க்கும் மனோபாவம் கடைகளில் உள்ளது. அதன் மதிப்பு அதிகம் இருந்தாலும் கூட விற்பனை மதிப்பு குறைகிறது.
3. 1 லட்சம் ரூபாய் தங்க நகையை அடகு வைத்தால் அதற்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் வெள்ளிக்கு இதே அடகு மதிப்பு இல்லை.
4. 1 லட்சம் ரூபாய் வெள்ளிக்கு 50 ஆயிரம் கிடைத்தாலே ஆச்சர்யம்தான்.
5. பொதுவாக இது போன்ற உலோகங்களை வாங்குவதே அவசர காலத்தில் அதை பணமாக மாற்றலாம். ஆனால் வெள்ளி மதிப்பு அதிகம் இருந்தாலும் விற்கும் போது, அடகு வைக்கும் போது அந்த மதிப்பு இல்லை. தங்கம் அளவிற்கு மதிப்பு இல்லை. நகை கடைகளில் விற்றால் கூட அதே மதிப்பு இல்லை.
வெள்ளி விலை உயருகிறது
சமீப மாதங்களில், தங்கத்தின் விலை உலக அளவிலும், இந்தியாவிலும் கூடி வருகிறது. இருப்பினும், வெள்ளி விலை ஒப்பீட்டளவில் மந்தமாகவே உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை 25.1% உயர்ந்துள்ளது, வெள்ளி 13.5% உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் ஸ்பாட் சந்தையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.97,442 ஆக இருந்தது.
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக வருமானத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது.கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.












Click it and Unblock the Notifications