உடனே தங்கத்தை வாங்குங்க! உலகின் டாப் பொருளாதார வல்லுநர்கள்.. தங்கம் வாங்க சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
சென்னை: உலகின் டாப் பொருளாதார வல்லுனர்கள் அடுத்தடுத்து தங்கம் வாங்க வேண்டும் என்று சொல்லி அறிவுறுத்த தொடங்கி உள்ளனர். முக்கியமான பல பொருளாதார வல்லுனர்கள் தங்கம்தான் இப்போதைக்கு முக்கியம் என்று கூற தொடங்கி உள்ளனர்.
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். உலகின் அளவில் கடன் $76 டிரில்லியனாக உள்ளது, மேலும் $13 டிரில்லியன் கடன் வாங்கப்பட உள்ளது. கட்டணங்களும் பணவீக்கமும் பணத்தின் மதிப்பை குறைக்கும். இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். தங்கம் மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி.

தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடு. தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும். வேறு பாதுகாப்பான வழி இருக்க முடியாது. உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை...என்று அவர் கூறி உள்ளார்.
அதேபோல் சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். இப்போதைக்கு தங்கம் வாங்குவதே பெஸ்ட். தங்கம் வாங்குவதே பாதுகாப்பு. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் பொருளாதாரம் சரியும். தங்கம், வெள்ளி மட்டுமே பாதுகாப்பு என்று கூறி உள்ளார்.
ஏன் அறிவுறுத்துகின்றனர்
இப்படி உலகின் டாப் பொருளாதார வல்லுனர்கள் அடுத்தடுத்து தங்கம் வாங்க வேண்டும் என்று சொல்லி அறிவுறுத்த தொடங்கி உள்ளனர். முக்கியமான பல பொருளாதார வல்லுனர்கள் தங்கம்தான் இப்போதைக்கு முக்கியம் என்று கூற தொடங்கி உள்ளனர். இதற்குபின் காரணங்கள் உள்ளன.
1. டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதனால் பாதுகாப்பற்ற வர்த்தக சூழல் உள்ளது. இதனால் டாலர் மதிப்பு சரிகிறது.
2. டாலர் மதிப்பு சரிவதால்.. மற்ற நாட்டு பணத்தின் மதிப்பும் குறையும்.
3. இதனால் மார்க்கெட் சரியும். சர்வதேச மார்க்கெட் ஏற்கனவே சரிய தொடங்கிவிட்டது.
4. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தை மற்றும் பிட்காயின் இரண்டும் அடுத்தடுத்து சரிய தொடங்கி உள்ளது. Bitcoin (BTC) ஒரே நாளில் $80,000 க்கு கீழே சரிந்தது. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது. 1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 90 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது.
5. டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக நாளுக்கு நாள் மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்க மார்க்கெட்டில் 1.7 ட்ரில்லியன் டாலர் சரிந்து அழிந்து உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.14 கோடி அழிந்து போய் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
6. இதனால் தங்கம் மட்டுமே இப்போதைக்கு பாதுகாப்பு. அதுதான் ரியல் மணி. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து வரும் நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை வாங்குவதே இப்போதைக்கு பாதுகாப்பு ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications