சாப்பிட்டவுடன் இந்த 5 விஷயங்களை தப்பி தவறி கூட மறந்தும் செய்துவிடாதீர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: உணவு உண்ட பிறகு எந்த காரணத்தை கொண்டும் இந்த 5 செயல்களை மட்டும் செய்யவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, கொலஸ்டிரால் உள்ளிட்ட நோயால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மருத்துவர்கள், உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தி வருகிறார்கள்.

உடல் உழைப்பில்லாமை ஒரு புறம் இருந்தாலும் நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட பெரிய பிரச்சினைகளை கொடுக்கும். அதை சரி செய்துவிட்டாலே பாதி வியாதி ஒழிந்துவிடும்.
சாப்பிடும் போது வாயை திறந்து சாப்பிடக் கூடாது என்பார்கள். ஏனென்றால் காற்று உள்ளே போய்விடும். அது போல் நன்றாக மென்று சாப்பிட்டால்தான் எளிதில் ஜீரணமாகும் என்பார்கள். ஆனால் இன்று கோழி போல் லபக் லபக் என சாப்பிட்டு (முழுங்கிவிட்டு) விடுகிறோம். இது தவறு என்கிறார்கள். அது போல் சாப்பிட்டவுடன் பெரிய தவறு செய்கிறோம்.
சாப்பிட்டவுடன் சிறிது நேரம் கால் நடையாக நடக்க வேண்டும். அப்போதுதான் உணவு செரிமானமாகும். ரத்த சர்க்கரை அளவும் சீராகும் என்கிறார்கள். ஆனால் இன்று பலர் செய்யும் தவறு என்னவெனில் சாப்பிட்டவுடன் தூங்குவதுதான் பல வியாதிகளுக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். சாப்பிட்டவுடன் இந்த 5 காரியங்களை செய்ய கூடாது.
முதலில் தூங்குவது- சாப்பிட்டவுடன் தூங்குவது தவறான விஷயம். சாப்பாட்டை வாயில் போட்டதும் தூக்கம் வரும். ஆனால் தூங்கினால் வயிற்றில் அமிலத் தன்மை உருவாகி ஜீரணத்தை தடுக்கும். தூக்கம் வந்தாலும் அதை தவிர்த்துவிட்டு மெதுவாக உலாவ வேண்டும்.
இரண்டாவது உடற்பயிற்சி- அது போல சாப்பிட்டவுடன் உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டத்தை திசை திருப்பி ஜீரணத்தை குறைத்துவிடும். எனவே சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரம் கழித்துதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
3ஆவது டீ, காபி குடித்தல்- சாப்பிட்டதும் டீ, காபி குடிப்பது இரும்பு சத்துகளை உறிஞ்சி தாது சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். எனவே சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பான நீரையோ அல்லது மூலிகை டீயையோ குடிக்கலாம்.
4ஆவது முக்கியமானது- சாப்பிட்டவுடன் புகைப்பிடித்தல் கூடவே கூடாது. அப்படி செய்வது உங்களை ஆரோக்கிய பாதிப்பை இரு மடங்கு அதிகரிக்கும். இது உங்கள் நுரையீரலை மட்டும் தடுக்காது, இது ஜீரண மண்டலத்தையே பாதிக்கும்.
5ஆவது விஷயம் - பழங்களை உண்பது- பழங்கள் சத்தானவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிட்டால் வயிறு உப்புசம், அசவுகரியம் ஏற்படும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் காத்திருந்து பிறகு ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம். எனவே சாப்பிட்டவுடன் இந்த 5 செயல்களை செய்யாதீர்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications