சாய்பல்லவி 2 லிட்டர் இளநீர் குடிக்கிறாங்களாமே.. உண்மையில் அது ஆரோக்கியமானதா? எச்சரிக்கும் நிபுணர்கள்
சென்னை: தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது அசாத்திய நடிப்புத்திறனால் கட்டிப்போட்டுள்ள நடிகை சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் இளநீர் அதிக அளவு குடிப்பதாக கூறியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 2 லிட்டர் அளவுக்கு ரெகுலராக இளநீர் குடிப்பதாக கூறியிருந்தார். ஆரோக்கியமான இயற்கை பானமான இளநீர் ஒருநாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்.. அதிகமாக குடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய்பல்லவி. மலையாள சினிமாவான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகத்தில் கால் பதித்த சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் சாய்பல்லவி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தினமும் 2 லிட்டர் இளநீர் குடிப்பது நல்லதா
நயன்தாராதான் இந்த லிஸ்டில் இருந்த நிலையில், தற்போது சாய்பல்லவி இந்த இடத்தை எட்டி பிடித்து இருக்கிறார். கதைகளை தேர்வு செய்து தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிக்கும் சாய்பல்லவியின் வளர்ச்சி திரையுலகில் பலரும் பிரம்மிக்கும் வகையில் உள்ளது. சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், உணவு பழக்க வழக்கம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில், ரெகுலராகவே சுமார் 2 லிட்டர் அளவுக்கு இளநீர் குடிப்பேன் எனக் கூறியதாக பிரபல மலையாள பத்திரிகையான மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி 2 லிட்டர் இளநீர் ரெகுலராக குடிப்பது உடல்நலனுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்ற விவரங்களை பார்க்கலாம்.
ஹார்ட் அட்டாக் கூட ஏற்படுத்தக் கூடும்
கலப்படமே இல்லாத சுத்தமான ஒரு இயற்கை பானமாக இருப்பது இளநீர்தான். இளநீர் குடிப்பதால் ஏராளமான நலன்கள் உடலுக்கு உள்ளது என நாம் அனைவரும் அறிந்தது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். கிட்னியில் கற்கள் ஏற்படாமல் தடுக்கும். சருமத்தின் நலனுக்கு உகந்தது என இளநீர் குடிப்பதில் உள்ள நலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் அதிகப்படியான அளவில் இளநீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) இது குறித்து கூறியிருப்பதாவது:- இளநீரை அதிகப்படியாக குடிக்கும் போது கடுமையான ஹைபர்காலேமியா (severe hyperkalemia ) ஏற்பட வாய்ப்புள்ளதாம். ஹைபர்கலோமியா என்பது ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்க கூடியது. இது இதய பாதிப்பு, படபடப்பை அதிகப்படுத்தும். ஹார்ட் அட்டாக் கூட ஏற்படுத்தக் கூடும்.
கிட்னி கோளாறு உள்ளவர்கள்
வயது வந்த நபர்களுக்கு (adults) பொட்டாசியம் அளவு என்பது 3.5 முதல் 5.0 மில்லிமோல்ஸ் ஒரு லிட்டரில் இருக்க வேண்டும். 680-985 எம்.ஜி அளவாகும். ஒரு எட்டு அவுன்ஸ் இளநீரில் மட்டும் 600 எம்.ஜி பொட்டாசியம் இருக்கிறதாம். எனவே, பிற அனைத்து உணவு பொருட்களை போல இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உடலுக்கு தீங்குதான்.
அதேபோல தொடர் கிட்னி கோளாறு உள்ளவர்கள் அதிகப்படியான திரவ உணவை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இளநீரில் அதிக பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தில் சமநிலையற்ற எலக்டோலைட் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்ததை ஏற்படுத்தக் கூடும். சில நேரங்களில் மல சிக்கலையும் ஏற்படுத்தும்" என்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இளநீர் எவ்வளவு குடிக்கலாம்?
வெயில் காலம் தொடங்கியிருப்பதால் சாலையோர கடைகளில் இளநீர் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. வெயிலுக்கு இளைப்பாற பலரும் இளநீர் கடைகளில் வண்டியை நிறுத்திவிட்டு குடிப்பதை பார்க்கிறோம்.மேலே உள்ள தகவலை பார்த்துவிட்டு ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று பார்க்கலாம். ஒருநாளைக்கு கால் லிட்டர் அதாவது 250 மில்லி இளநீர் குடிப்பது உடல் நலனுக்கு ஆரோக்கியமானது.
இளநீரை குடிக்க உகந்த நேரம் எது என்று எடுத்துக்கொண்டால் மிட் மார்னிங் என்று சொல்லக்கூடிய ஒரு 10 மணியளவில் இளநீர் குடிப்பது உடல் நலனுக்கு ஏற்றதாம். அதாவது காலை உணவு முடித்து லேசான பசி உணர்வு ஏற்படும் போது இளநீர் குடிப்பதற்கு உகந்த நேரமாக மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications