ரேஷன்ல அரிசி வாங்கிட்டீங்களா.. அப்ப இதை கவனிச்சீங்களா? "சமூக அந்தஸ்தை" உடைக்கும் பயன்கள்.. ஆச்சரியம்
சென்னை: பேருண்மை என்னவென்றால், ரேஷன் அரிசி நம் உடலுக்கு அவ்வளவும் நல்லது.. இன்றுவரை அடித்தட்டுவர்க்க மக்களின் முழுநேர உணவாக காப்பாற்றி கொண்டிருக்கும் இந்த ரேஷன் அரிசியின் சிறப்புகள் அதிகம்.
ரேஷன் அரிசியை நிறைய பேர் தவிர்த்து வந்த நிலையில், இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ரேஷன் அரிசிக்கு எல்லா காலத்திலுமே மதிப்பு இருக்கவே செய்கிறது.
அதனாலேயே ரேஷன் அரிசி கடத்தல் இன்றுவரை தமிழகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அரிசி கடத்தப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு, வேறு ரூபத்தில் சற்று விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு, மறுபடியும் நம்மிடமே புழக்கத்தில் வந்து சேருகிறது.

சுத்தம் செய்வது எப்படி: ரேஷன் அரிசியை சிலர் தவிர்க்க காரணம், அதிலுள்ள வாடைதான்.. அரிசி வாங்கியதுமே, நன்றாக சலித்து அதிலுள்ள தூசு, உமிகளை நீக்கி கொள்ள வேண்டும்.. சமைப்பற்கு முன்பு, ரேஷன் அரிசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அரிசியை களைந்தால், அதிலுள்ள வாசனை நீங்கவிடும். அதற்கு பிறகு சமைத்து சாப்பிடலாம்..
ஒருவேளை இந்த அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்கவில்லையானால், பொங்கல் செய்து சாப்பிடலாம். அல்லது இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, ஆப்பம் செய்து சாப்பிடலாம். சிலர் இந்த அரிசியில்தான் முறுக்கு சுடுவார்கள். 10 மணி நேரத்துக்கும் மேல் ஊறவைத்து அரைத்தால் இட்லி மாவு நன்றாக வரும்.. ரேஷன் அரிசி சாப்பாடு மீதமாகிவிட்டால், அடுத்தநாள் வரை தண்ணீர் ஊற்றவில்லை என்றால் கூட தாங்கும். ஆனால், மற்ற வகை அரிசி சாப்பாட்டில் அப்படியில்லை.
நீரிழிவு நோயாளிகள்: இந்த ரேஷன் அரிசியை சாப்பிடுவதால் வரும் பலன்கள் என்னென்னவென்று பார்த்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.. நீரிழிவு நோய் குணமாவதற்கு இந்த ரேஷன் அரிசியைத்தான், நீரிழிவு நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்களாம். ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுவதால் செரிமானப்பிரச்சனை தீர்கிறது..
அதேபோல, உடல் மெலிந்து உள்ளவர்கள் தினமும் இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.. இந்த அரிசி உணவை சாப்பிட்டால், நீண்டநேரத்துக்கு பசியும் எடுக்காது.. 3 வேளை சாப்பிடும் உணவு, 2 வேளையாக குறைந்துவிடும்.. உடலும் வலிமை பெறுகிறது.
சமூக அந்தஸ்து: அதைவிட, "சமூக அந்தஸ்து" என்ற வட்டத்துக்குள் ரேஷன் அரிசியை சிலர் அடைத்துவிட்டதால்தான், இதன் பலனை அறிந்துகொள்ளாமலேயே தவிர்த்தும் விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, விலை மலிவு அல்லது இலவசம் என்பதாலேயே ஒரு பொருளின் மதிப்பு எந்த காலத்திலும் குறைந்துவிடுவதில்லை..!!












Click it and Unblock the Notifications