துளசி இலை.. பிசுபிசு தலைமுடிக்கு இந்த 1 பொருள் போதுமே.. தலையில் எண்ணெய் பசை போக்கும் தக்காளி.. வாவ்
சென்னை: எண்ணெய் பசையுடன் தலைமுடி இருந்தாலே, தலைமுடி உதிர்வது அதிகமாகிவிடும்.. கூந்தலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த எண்ணெய் பசைத்தன்மையை எப்படி போக்கலாம் தெரியுமா? எளிய முறையில் சில சில டிப்ஸ்கள்
சிலருக்கு தலையில் பிசுபிசுப்புகள் அதிகமாக காணப்படும். மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதாலேயே, தலையில் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது.

பிசுபிசுப்பு: இப்படி எண்ணெய் பசை இருந்தால், அழுக்கு எளிதில் படிந்துவிடும். அழுக்குகள், வியர்வை ஒன்றாக சேரும்போதும், இப்படி ஈரத்தன்மை வந்துவிடும்.. ஸ்டிரைட்னர்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் பிசுபிசுப்புத்தன்மை வந்துவிடும். தலைமுடி எண்ணெய்த்தன்மையுடன் இருந்தால், தலைமுடி மேலும் கடினமாகிவிடும்.
அதனால், எண்ணெய் பசையான தலைமுடி உடையவர்கள், அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும்.. தூசு, அழுக்கு தலையில் சேர்ந்துவிடாமல் பராமரிக்க வேண்டும். அதிக எண்ணெய் பொருக்ளை உணவில் தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாகவே எண்ணெய் பசையுடன் தலைமுடி இருந்தால், ஷாம்புவை மாற்றி பார்க்க வேண்டும். மாய்ஸ்சரைசிங் ஷாம்புவிற்கு பதிலாக ஹேர் கிளின்சரை பயன்படுத்தலாம்.
எலுமிச்சை: அதேபோல, குளிக்கும்போது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளில் மருதாணி அல்லது எலுமிச்சை கலந்த ஷாம்புக்களாக உபயோகப்படுத்தினால் பிசுபிசுப்பு போய்விடும்.
அல்லது கேரட்டையும் வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால் போதும்.. அதேபோல வேப்பிலையிலிருந்து சாறு எடுத்து, அதை சிறிது தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனால் எண்ணெய் பிசுபிசுப்பு முழுமையாக நீங்கிவிடும்.
எண்ணெய் பசை: அதேபோல, வாரம் ஒருமுறை, வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், எண்ணெய் பசை போய்விடும். இதுபோலவே, துளசி இலைகளையும் ஒருகைப்பிடி விழுதாக அரைத்து, உச்சந்தலையில் தேய்த்து, ஊறவைத்து அலசினாலும், எண்ணெய் தன்மை நீங்கிவிடும்.. சிகைக்காயில் கெட்டித்தயிரை கலந்து பேக் போல போட்டு குளிக்கலாம்.
தலையில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன், போதுமான ஈரப்பதத்தையும் அளிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளது.. இந்த கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்கள் தலையில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே, கற்றாழை ஜெல்லை 15 நிமிடங்கள் தலையில் நன்றாக தேய்த்து, அலசலாம்.. இதனால், கூந்தல் பட்டு போல பளபளக்கும்.
தக்காளி: சிலர் தக்காளியையும் பயன்படுத்துவார்கள்.. இந்த தக்காளியில் சிட்ரிக் அமிலம் உள்ளதால், இதனை விழுதாக அரைத்து, தலையில் தடவி அரை மணிநேரம் அப்படியே வைத்திருந்து பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசினால், தலைமுடியில் நல்ல மாற்றம் தென்படும். தலைமுடியிலும் நீர்ச்சத்து இருக்கும்படி, இந்த தக்காளி வைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications