லேட் நைட் தூங்குவதால் ஏற்படும் பாதிப்பு என்ன! ஆண்மை குறைவு மட்டுமில்லை.. உயிரே கூட போகுமாம்! ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேண்டும் என்றே லேட் நைட் வரை விழித்திருந்த வேலை செய்கிறார்கள். இருப்பினும், இதுபோல தினசரி தாமதமாகத் தூங்குவது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இளைஞர்கள் பலரும் இந்த காலத்தில் லேட் நைட் வரை முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கு வேறு வழி இல்லை.. நைட் ஷிப்ட் இருக்கும். ஆனால், பலர் வேண்டும் என்றே நள்ளிரவைத் தாண்டியும் விழித்து இருக்கிறார்கள்.

health sleep

லேட் நைட் தூக்கம்

லேட் நைட்டில் வெளியே செல்வது, பார்ட்டி செய்வது, ஹெவியான உணவு சாப்பிடுவது ஆகியவற்றை செய்கிறார்கள். இதனால் அவர்கள் மிகத் தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள். ஏதோ ஓரிரு நாள் என்றால் பரவாயில்லை. ஆனால், இவர்கள் எல்லா நாட்களிலுமே இதுபோல லேட் நைட் தான் தூங்குகிறார்கள். ஆனால், இதுபோல தினசரி லேட் நைட்டில் தூங்கும் போது நமது உடலில் பல மாற்றங்கள் நடைபெறுகிறது. இது பல வழிகளில் நம்மைப் பாதிக்கவும் செய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

முதலில் இரவில் தாமதமாகத் தூங்கும் போது அது உடல் எடை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.. இதுபோல சரியாகத் தூங்காமல் இருக்கும் போது அது நமது பசி மற்றும் அலர்ட்டாக இருக்கும் ஹார்மோன்களை சீர்குலைக்கும். இதனால் நமக்குப் பசி அதிகரித்து, ஓவராக சாப்பிடத் தொடங்குவோம். மேலும், தூக்கமின்மை காரணமாக உடற்பயிற்சியைக் கூட நம்மால் சரியாகச் செய்ய முடியாது. இதுபோன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி குறையும்

அதேபோல நோயெதிர்ப்பு சக்தியும் இதனால் குறையும். இதன் காரணமாகவே தூங்காமல் இருப்போருக்கு எளிதாக நோய்ப் பாதிப்பு ஏற்படும். அதாவது நோய் ஏற்படும் போது வைரஸ்களை அழிப்பதில் சைட்டோகைன்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தூங்காமல் இருக்கும்போது சைட்டோகைன்கள் உற்பத்தி குறையும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் தூங்காமல் இருப்போருக்குச் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு அடிக்கடி ஏற்படலாம்.

இரவில் தாமதமாகத் தூங்குவது உடலை ரொம்பவே சோர்வாக மாற்றும். இது காலையிலும் எதிரொலிக்கும். நீங்கள் எப்போதும் சோம்பலாகவே உணர்வீர்கள். இதனால் ஒரு கட்டத்தில் தினசரி பணிகளைச் செய்வதே கடினமாக மாறும். காலை எழும் போது நாம் சோர்வாக இருந்தால் அது அன்று நாள் முழுக்க நமது செயல்பாட்டைப் பாதிக்கும்.

குழந்தையின்மை

அடுத்து ஹார்மோன் சமநிலை.. சரியாகத் தூங்காமல் இருப்பது ஹார்மோன் சமநிலையைச் சீர்குலைக்கும். தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் போன்ற ஹார்மோன் உற்பத்தி பாதிக்கும். மேலும், அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் கூட அதிகம் உற்பத்தியாகிறது.. இது கருவுறுதல், வளர்சிதை என எல்லா விஷயத்தையும் பாதிக்கிறது.

உயிரே கூடப் போகலாம்

அதேபோல இது அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதனால் நம்மால் தெளிவாகச் சிந்தித்துச் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம். உடனடியாக எதிர்வினையாற்றும் திறனைக் குறைக்கிறது.. ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதையும் குறைக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் நமது உற்பத்தித் திறனைக் குறைக்கும். சாலைகளில் நாம் பயணிக்கும் போது இதனால் முழு கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் விபத்துகள் ஏற்படவும் கூட வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+