சாப்பிட்ட உடன் 'காபி, டீ' குடிக்கிற பழக்கம் இருக்கா? அனீமியா குறைபாடு வருமாம்.. ஐசிஎம்ஆர் வார்னிங்
சென்னை: டீ, காபியை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் சாப்பிட்டால், உணவின் மூலம் இரும்பு சத்து கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் எனவும் இதனால் அனீமியா போன்ற குறைபாடுகள் வரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் காலை, மாலையில் டீ, காபி இடம் பெறாத வீடுகளை பார்ப்பது கொஞ்சம் அரிதுதான்.. கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதல்.. தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் வரை வேலைக்கு இடையே கண்டிப்பாக டீ, காபியை அருந்துவதை பார்க்க முடியும்.

பலருக்கு டீ அல்லது காபியையோ குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள்.. குளிர்காலமோ.. வெயில் காலமோ டீக்கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ, காபி அருந்தும் பழக்கம் கொண்டு இருக்கிறார்கள்.
இளைஞர்கள் பலரும் தங்களுக்கு காலை உணவே... இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்கு பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதை பார்க்க முடிகிறது. இப்படி இந்தியர்களின் உணவு கலசாரத்த்தில் தவிர்க்க முடியாத இடத்தை இந்த சூடான பானங்கள் இடம் பெற்று விட்டன. டீ மற்றும் காபியில் உள்ள காஃபினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில் தான், டீ காபி அருந்துபவர்களுக்கு இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம் ஆர் புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது துணை அமைப்பான தேசிய ஊட்டசத்து நிறுவனம் (NIN) இணைந்து மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-
டீ மற்றும் காஃபியில் காஃபின் கலந்துள்ளது. எனவே இது மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்பு நிலையையும் தூண்டுகிறது. 150 மில்லி கப் காஃபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டண்ட் காஃபியில் 50 - 65 மில்லிகிராமும், டீயில் 30 - 65 மில்லிகிராம் காஃபினும் உள்ளது. நாளொன்றுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல.
அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸ் உணவில் இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் இந்த பானங்களால் தடைபடும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும்.
அதிகமாக காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் கலக்காத டீ குடிப்பது இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதோடு, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்று நோய் ஆகிய அபாயத்தை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications