ஏன் குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சீறுநீர் கழிகின்றனர்? இதை எப்படி சரிசெய்வது?
குழந்தை படுக்கையில் சீறுநீர் கழிப்பதற்கான காரணங்களும், அதை சரிசெய்ய பின்பற்றவேண்டிய உணவுமுறைகளும், எளிய தீர்வுகளும்
சென்னை: குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது மிக சாதாரணமான விஷயம் ஆகும். சுமார் 90% குழந்தைகளுக்கு படுக்கையிலே சிறுநீர் கழிப்பது தானாகவே நின்றுவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் 10-15 வயது வரை தொடர்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் இது தொடர்ந்தால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான முறையில் தகுந்த நேரத்தில் இப்பிரச்சினையை தடுக்க சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளது. பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். சில குழந்தைகளுக்கு ஒரு சிறு நிகழ்வு கூட பயத்தை ஏற்படுத்தி அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்களால் பாதிப்படைகிறார்கள், இதனால் உடலில் மாற்றம் ஏற்பட்டு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் 7 வயதிற்கு முன்பே சிறுநீர் பை வளர்ச்சி அடைந்துவிடும், ஆனால் சில குழந்தைகளுக்கு சிறுநீர் பை வளர்ச்சி சற்று தாமதமாகவே வளரும். சரியான சிறுநீர் பை வளர்ச்சி இல்லாததால், இரவில் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற தூண்டுதல் மூளைக்கு செல்லாததால், படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். அடிக்கடி Unirary Tract Infection (UTI) சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதும், நரம்பு சார்ந்த குறைபாடு காரணமாகவும் சிறுநீர் கழிப்பதற்கு சரியான தகவலைப் மூளை பெறாமல் இருப்பது மற்றொரு காரணம். மேலும் மரபணு மாற்றங்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் வகை 1 (Sugar type 1) காரணமாக காலை நேரத்திலும் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை பார்க்கலாம்.

கட்டுப்படுத்தவேண்டிய வழிமுறைகள்
இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த சில வழிமுறைகள் பின்பற்றினால் இப்பிரச்சினையை குறைக்கலாம். குழந்தையை மாலை நேரத்திற்கு பிறகு குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே குடிக்கச் செய்யவேண்டும். இரவில் இனிப்புப் பண்டங்கள் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் குழந்தையை 1 அல்லது 2 முறை சிறுநீர் கழிக்கச் செய்யவேண்டும். குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த உதவும் நல்ல ஆலோசனைகள் கொடுத்து, அவர்களின் வயிற்று தசைகள் மற்றும் சிறுநீர்ப்பையை வலுப்படுத்தும் சில உடற்பயிற்சிகளைச் செய்யச் கற்றுக்கொடுக்கவேண்டும்.

குருதிநெல்லி சாறு (Cranberry Juice)
குருதிநெல்லி சாறு, இது உடல் தசைகள் மற்றும் சிறுநீர்ப்பையை வலுப்படுத்துகிறது மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து, சிறுநீர்ப்பையில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் 30% வரை தடுக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை (Cinnamon)
காலையில் ஒரு சிறிய அளவு இலவங்கப்பட்டையை வாயில் வைத்து மெல்லச் செய்து, இவை உமிழ் நீருடன் கலந்து குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சின்னமால்டிஹைடு என்ற அத்தியாவசியமான எண்ணெய் பொருள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சில பாக்டீரியாக்களை தடுக்கிறது.

ஆட்டு மண்ணீரல் (Goat Spleen)
ஆட்டு மண்ணீரலை அல்லது ஆட்டு சுவரொட்டி சமைத்து அல்லது சுட்டு கொடுத்தால் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த உதவும். சிறுநீரக நோய் உள்ள குழந்தைகளுக்கு ஆட்டு மண்ணீரல் சிறந்த மருந்தாகும். மண்ணீரல் சாப்பிடுவதால் சிறுநீரக தொற்றுகள் தீர்க்கும். சிறுநீரக நோயால் பாதிக்க பட்டவர்கள் மாதம் இருமுறை சாப்பிட்டு வரலாம். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உடல்ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்த உணவாக கருதப்படுகின்றது இந்த ஆட்டு மண்ணீரல்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications