Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தைக் கத்தையாய் தலைமுடி வருதா? நெல்லிக்காய் சோறு, நெல்லி லட்டு போதுமே.. கொட்டும் தலைமுடிக்கு தீர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி உதிர்வு பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. தலைமுடி பிரச்சனைக்கு காரணத்தை அறியாமல், செயற்கை மருந்துகளை பலரும் நாடுகிறார்கள்.. ஆனால், இயற்கையான முறையிலேயே தலைமுடி உதிர்வுக்கும், வறண்ட கூந்தலுக்கும், தீர்வு காணலாம்.. சத்துக்கள் நிறைந்த காய்கறி சூப்கள், ஜூஸ்களுக்கு, தலைமுடி வளர்ச்சியில் பெரும் பங்கு உள்ளது. அந்தவகையில், தலைமுடியின் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் எப்படி உதவுகிறது? எந்தெந்த வழிகளில் நெல்லிக்காயை பயன்படுத்தலாம்? என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

நம்முடைய உடலில் ஹார்மோன்கள் குறைபாடுகள் இருந்தால், தலைமுடி பாதிப்பு இருக்கும்.. இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.. ஜிங்க் சத்து குறைந்தாலும், தலைமுடி உடையும்..

Nellikkaai Soru Nellikkai Laddoo

தலைமுடிக்கு சத்துக்கள்

புரதசத்து குறைவாக இருந்தாலும், முடியின் செல்களில் பாதிப்பு ஏற்படும்.. வைட்டமின் D குறைந்திருந்தாலும், தலைமுடி வளர்ச்சி தடை பட்டுவிடும். எனவே, இரும்புச்சத்து, புரதச்சத்து உணவுடன் சேர்த்து வைட்டமின் C, B, E நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் C நிறைந்த உணவு, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின் B அடங்கிய உணவுகள் தலைமுடிவளர்ச்சியை பெருக்க செய்கிறது. வைட்டமின் E நிறைந்த உணவு, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்து, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. மேற்கண்ட சத்துக்கள் அனைத்தும் அடங்கியதே நெல்லிக்காய்.

நெல்லிக்காய் பலன்கள்

ரத்தவிருத்தியை பெருக்கக்கூடியது. ரத்த ஓட்டம் தடையின்றி இருந்தாலே, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.. நெல்லிக்காயில் பல நன்மைகள் இருப்பதால்தான், பல ஷாம்புகளின் தயாரிப்புகளில் மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.. எனவே வீட்டில் நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் லட்டு, நெல்லிக்காய் சோறு போன்றவற்றை பயன்படுத்தி தலைமுடி உதிர்வுக்கு தீர்வு காணலாம்.

தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காயை துண்டித்து போட்டு, காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தினால், புரோட்டீன் சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்கும்.. அல்லது எள் எண்ணெய்யுடன் நெல்லிக்காய் சாறு, வெட்டிவேர் கலந்து காய்ச்சி பயன்படுத்தலாம். பாதாம் எண்ணையில், நெல்லிக்காய் சாறு காய்ச்சி தேய்த்தால் வறண்ட முடி, வலுப்பெறுவதுடன், தலைமுடி அதிகமாக வளரும். உடலில் ரத்த சோகை பிரச்சனையும் குழந்தைகளுக்கு வராது.

நெல்லிக்காய் சோறு

நெல்லிக்காய் சாதம் செய்து, வளரும் குழந்தைகளுக்கு தரலாம்.. நெல்லிக்காயிலுள்ள விதையை நீக்கிவிட்டு, தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைத்துவிட வேண்டும். பிறகு ஒரு வாணலில் நெய் ஊற்றி, மிளகு தாளித்து, அரைத்த நெல்லிக்காய் விழுதை கொட்டி கிளற வேண்டும். வடித்த சாதத்தில் சிறிது உப்பு போட்டு, நெல்லிக்காய் விழுதையும் கொட்டி கிண்டினால், நெல்லிக்காய் சோறு ரெடி.

அதேபோல, நெல்லிக்காயில் லட்டு செய்து தரலாம். நெல்லிக்காய்களை இட்லி தட்டில் 10 நிமிடம் வேகவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆறவைத்து, துருவிவிட வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பாதாம், பருப்பு வறுத்து, துருவிய நெல்லிக்காயும் சேர்த்து வதக்கி, நாட்டுச்சர்க்கரை தூவி கிளற வேண்டும்.

கடைசியா, ஏலக்காய், சுக்கு சேர்த்து இறக்கி சூடாக இருக்கும்போதே லட்டு போல பிடித்துக் கொண்டால் நெல்லி லட்டு ரெடி.

நெல்லிக்காய் சாறு

அதேபோல, நெல்லிக்காய், துளசி இலை, கடுக்காய், கறிவேப்பிலை போன்றவற்றில் தலா 100 கிராம் எடுத்து, விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.. பிறகு, மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிட்டால், அதிலிலிருந்து சாறு கிடைக்கும். இந்த சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி எடுத்து வைத்து கொண்டு, தலைக்கு தடவி வந்தார்ல, முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.

அதேபோல, வெந்தயப்பொடி ஒரு ஸ்பூன், கடுக்காய் தூள் அரை ஸ்பூன், கடலை மாவு 3 ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். இதில், எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு இரண்டையுமே சமமாக கலந்து விழுதாக கலந்து, தலைக்கு பேக் போடலாம். இதனால், தலையிலுள்ள செதில்கள் நீங்குவதுடன், தலையிலுள்ள அரிப்புகளும் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+