மண்ணீரலை காக்கும் வெற்றிலை.. பித்தம் + கபம் + வாதத்தை விரட்டும் வெத்தல.. கடலை மிட்டாய் இருக்கா? செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலை 4 இருந்தாலே, பல்வேறு உடல்நலக் கோளாறுகளை தீர்க்கலாம் என்கிறார்கள்.. ஆண்மை குறைபாடு முதல் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவது வரை அத்தனை பிரச்சனைகளுக்கும் வெற்றிலைகள் மருந்தாகின்றன.

ஆண்மை குறைபாடுகளை போக்கக்கூடிய தன்மை இந்த வெற்றிலைகளுக்கு இருக்கிறதாம்.. வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்புடன், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், , லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து இரவு உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால், தாம்பத்யத்திலும் நல்ல பலன் கிடைக்குமாம்.

Best Medicinal Uses of Betel Leaves and Do you know Betel leaves strengthen the body organs including the spleen
வெற்றிலை: அதேபோல, வெற்றிலையை இடித்து, சாறு மட்டும் எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிடும்போது, விறைப்பு பிரச்சனை தீருமாம்.. அல்லது வெற்றிலையுடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கோரோசனையையும் கலந்து சாப்பிட்டாலும் தாம்பத்யத்தில் ஆர்வம் அதிகரிக்குமாம்.. ஆண் பெண் இருவருமே இதனை சாப்பிடலாம் என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல், மருந்தாக உட்கொள்ளக்கூடாது.

அதேபோல, உடலுறுப்புகளை பலப்படுத்துவதில் வெற்றிலையின் பங்கு என்ன தெரியுமா? வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் போன்ற சத்துக்களுடன் கால்சியமும் இரும்புச்சத்துக்களும் நிறைந்துள்ளதால், உடலுறுப்புகள் அத்தனைக்கும் பலத்தை தருகின்றன இந்த வெற்றிலைகள்.

தாய்ப்பால் :
தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குவதுடன், வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. இதனால், குடல், ஈரல், மண்ணீரல், மூளை, இதயம், கல்லீரல், போன்ற உறுப்புகள் முழு ஆரோக்கியம் பெறுகின்றன.. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால், வளரும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு தருவது அவர்களின் நினைவாற்றலை பெருக்கும் என்கிறார்கள்.

பாக்கு இல்லாவிட்டாலும், வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.. பூச்சிக்கடி, விஷக்கடி, சரும அலர்ஜி, போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், 2 வெற்றிலையுடன் 5 மிளகு, சிறிது கல் உப்பு சேர்த்து மென்று விழுங்கினால் பலன் கிடைக்கும்.

எப்போதுமே வெற்றிலையை சாப்பிடும்போது, அதன் காம்பு, நுனி, நடு நரம்பு இவைகளை நீக்கி விட்டே சாப்பிட வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றுமே சரியான விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

அதேபோல, வெற்றிலையை மென்று, உடனே அதன் சாற்றை விழுங்கக்கூடாதாம்... வெற்றிலை பாக்கினை நன்றாக மென்று முதல் இரண்டு உமிழ்நீரினை வெளியே துப்பிவிட வேண்டுமாம்.. அதற்கு பிறகுதான், சாற்றை விழுங்க வேண்டும் என்கிறார்கள்..

அளவுகோல்: உடலில் அதிகம் பித்தம் சேர்ந்துவிட்டால், பாக்கு நிறைய சேர்த்து, காலை உணவுக்கு பிறகு வெற்றிலை போடுவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டுமாம்.. உடலில் வாதம், வாயு அதிகம் சேராமல் இருக்க வேண்டுமானால், மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டுமாம்..

இரவில் வெற்றிலைகளை அதிகப்படுத்தி போட்டு வந்தால் நெஞ்சில் கபம் தங்காது, இது பற்களில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது என்கிறார்கள்.

மூன்று வேளையும் இப்படி சரிவிகிதத்துடன் வெற்றிலை பாக்கு போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.. ஆனால், இந்த வெற்றிலையுடன் புகையிலையை சேர்த்து சாப்பிடும்போதுதான் சிக்கல்கள் வந்துவிடுகிறதாம்.. சிலர் வெற்றிலையுடன் கடலை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவார்கள்.. இதுவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+