கொட்டை பாக்குகளில் கொட்டி கொட்டி கிடக்கும் நன்மை.. இவங்க மட்டும் பாக்குகளை தொடாதீங்க.. ஏன் தெரியுமா
சென்னை: கொட்டை பாக்கு வெற்றிலையுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.. ஆனால் உண்மையிலேயே கொட்டை பாக்குகள் நன்மைகளை தரக்கூடியதா?
வெற்றிலையில் சேர்க்கப்படும் சுண்ணாம்பு, பாக்கு போன்றவை செரிமானத்துக்காகவே சேர்க்கப்படுகின்றன.. அதேசமயம் சில மருத்துவ பயன்பாடுகளுக்காகவும் பாக்குகளை பயன்படுத்துகிறார்கள்.

தாம்பத்திய பிரச்சனைகளுக்கு கானா வாழைக்கீரை உட்கொள்ள தருவார்கள்.. அப்போது இந்த கானா வாழைக்கீரையுடன் கொட்டைப்பாக்கு சேர்த்து பயன்படுத்துவார்கள்.. இதனால், தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும் நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில்தான் இவைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பற்கள்: அதேபோல பற்களுக்கு சிறந்த பலத்தை இந்த கொட்டை பாக்குகள் தருகின்றன.. பற்கள் உறுதியாக இருக்க, கொட்டை பாக்குகளை நெருப்பில் சுட்டு தூளாக்கி, அதில் பற்களை தேய்த்து வரலாம்.
தொற்றுகளுக்கும், கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை இந்த பாக்குகள்.. இதனால் இரைப்பையில் உள்ள தொற்றுகளை அகற்றக்கூடியவை.. கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி குடலை சுத்தப்படுத்தக்கூடியது.. மலமிளக்கியாகவும் செயல்படுகின்றன.. இயற்கையான கால்சியம் சத்துக்கள் நம்முடைய உடலில் சேரவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள்: பித்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இந்த பாக்குகளுக்கு உள்ளது.. அதனால், பாக்குகளிலிருக்கும் துவர்ப்பு சத்துதான், பித்தத்தை கட்டுக்குள் வைக்கிறதாம்.. அதனால்தான், இந்த கொட்டை பாக்கில் டீ போல தயாரித்து குடிப்பார்கள்.. இதனை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம்.. துவர்ப்பு சத்துக்கள் நிறைந்த இந்த டீ, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பாக்குகளை பல வருட காலம் பயன்படுத்தினால், பல் ஈறுகள் கெட்டுவிடும்.. பற்களில் கறை படிவதுடன், ஈறுகளும் வலுவிழந்துவிடும்.. மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..
தீமைகள்: வலிப்பு நோயாளிகள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகளும் கொட்டை பாக்குகளை சாப்பிடக்கூடாது.. நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தக்வடியது என்பதால் ஆஸ்துமா நோயாளிகளும் கொட்டைப்பாக்கு தவிர்க்க வேண்டும்.. உடல் பருமன் இருப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், போன்ற ஆபத்துகள் வரலாம்.
உடலில் ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கொட்டை பாக்குகளை தவிர்த்தால், ரத்தசோகையையும் தவிர்த்துவிடலாம்.. வெற்றிலை போடுவதற்கும், வாய், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புகள் உள்ளதால், குறிப்பிட்ட அளவுடன் பாக்குகளை பயன்படுத்தலாம்...!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications