“டவுட்டு”.. செக்ஸுக்கு பின் யூரின்.. கருத்தரிப்பில் பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
செக்ஸுக்கு பிறகு சிறுநீர் கழிப்பதால் கருத்திரிப்பதை தடுக்க முடியுமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்
சென்னை: உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் கழித்தால் கருத்தரிக்க முடியாதா? என்கிற கேள்வில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
உடலுறவு மற்றும் கருத்தரிப்பது தொடர்பாக பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருந்தாலும் அதனை பொதுவெளியில் கேட்கவோ, அது குறித்து பேசவோ மக்கள் தயங்குகிறார்கள். உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில் இது தொடர்பான கேள்விகளை விவாதிக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இவை பேசப்படுகிறதா? என்று கேட்டால் கிடையாது என்று சொல்லலாம்.
எதை தவிர்த்தாலும் தவிர்க்காவிட்டாலும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை தவிர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விரிவாக பதிலளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, "இந்தியா போன்ற நாடுகளில் உடலுறவு குறித்த அதீத கற்பனைகளுக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. அப்படி கருத்தரிப்பு குறித்து உருவான ஒரு கருத்துத்தான், செக்ஸ் வைத்துக்கொண்ட பின்னர் உடனே சிறுநீர் கழித்தால் கர்ப்பமடைய மாட்டோம் என்பது.

சிறுநீர் குழாய்
இதற்கு முக்கிய காரணம் சிறுநீர் கழிக்கும்போது அத்துடன் விந்தணுக்களும் சேர்ந்து வெளியே வந்துவிடும் என்று கருதுவதுதான். ஆண்களுக்கு உச்சமடையும்போது விந்தணு வருவதை போல பெண்களுக்கும் ஒருவித திரவம் சுரக்கும். இந்த திரவத்தில் ஃபெரோமோன்கள் அதிக அளவில் இருக்கும். இந்த ஃபெரோமோன்கள் என்ன செய்யும் என்றால், ஆண்களின் விந்தணுக்கள் கரு முட்டையை நோக்கி நகர உதவுகிறது. எனவே செக்ஸுக்கு பின்னர் யோனியை கழுவுவதால் அல்லது சிறுநீர் கழிப்பதால் எந்த விந்தணுக்களும் வெளியேறாது.

தொற்று பாதிப்பு
சிறுநீர் குழாயும், யோனியும் பக்கத்து பக்கத்திலேயே இருப்பதால் நமக்கு இரண்டு ஒன்று போல தோன்றும். ஆனால் இரண்டு குழாய்களும் வெவ்வேறானது. எனவே சிறுநீரில் விந்தணுக்கள் வெளியேறாது. ஆனால் சில நன்மைகள் இருக்கிறது. ஆசனவாய்க்கு அருகில் யோனியும், சிறுநீர் குழாயும் அமைந்திருப்பதால் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதே நீங்கள் செக்ஸுக்கு பின்னர் சிறுநீர் கழித்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். யோனியில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாக்கள் இதன் மூலம் வெளியேறிவிடும்.

கற்பிதங்கள்
செக்ஸுக்கு பின்னர் சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும்போது சில விந்தணுக்கள் யோனியிலிருந்து கீழே வழியலாம். இதனால் கருத்தரிப்பு சாத்தியமாகாதோ? என்று பலருக்கு சந்தேகம் எழுகிறது. கருத்தரிப்புக்கு மிக குறைந்த அளவு விந்தணுக்களே போதுமானது என்பதால் இவ்வாறு கீழே கொட்டும் விந்தணுக்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். இந்த தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க வேண்டுமெனில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள். அதுதான் தேவையற்ற குழப்பத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாலியல் கல்வி
உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாலியல் நோய்களை கடத்தும் ஆபத்தான சூழலில் இருக்கின்றனர். இதற்கு காரணம் பாலியல் குறித்து தவறால்தான புரிதல்கள்தான். பாலியல் சுகாதாரம் குறித்த தவறான கற்பிதங்கள் இந்தியா போன்ற மக்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த கற்பிதங்கள்தான் தேவையற்ற கர்ப்பத்திற்கும், அதனை கலைக்கும்போது ஏற்படும் பாதிப்புகளுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே மாணவர்களிடம் பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டியதாக இருக்கிறது என்று மகளிர் அமைப்புகளும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications