சர்க்கரை நோயாளி கோதுமை சாப்பிட்டால் மட்டும் சுகர் குறைஞ்சிடுமா? சூப்பர் பலன் தரும் குதிரைவாலி அரிசி
சென்னை: சர்க்கரை நோயாளிகள் அரிசியை தவிர்த்துவிட்டு, பெரும்பாலும் கோதுமையை பயன்படுத்துகிறார்கள்.. அதிலும் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவதை பெரும்பாலானோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. இந்த கோதுமை சப்பாத்தியை சாப்பிட்டால் சுகர் ஏறாமல் இருக்குமா? அரிசியைவிட சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதா? சுருக்கமாக பார்ப்போம்.
அரிசிக்கு பதில் சப்பாதியை சாப்பிடுவது மேலானது.. காரணம், 60 கிராம் அரிசியில் 80 கலோரிகள், 1 கிராம் புரதம், 18 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
இதுவே ஒரு சிறிய கோதுமை சப்பாத்தியில் 71 கலோரி, 3 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.. அதாவது, கார்போஹைட்ரேட் அளவை ஒப்பிடும்போது, அரிசியிலும், கோதுமையிலும் கிட்டத்தட்ட ஒரே அளவுகளே உள்ளன.

கோதுமை சத்துக்கள்
ஆனால், கோதுமையில் சோடியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் B1, B2 நியாசின், ஃபோலேட், நார்சத்து, புரதம் ஆகியவையும் அரிசியை விட அதிகம் இருக்கிறது. எனவேதான், அரிசியைவிட சப்பாத்தி, கூடுதல் சத்து நிறைந்தது என்கிறார்கள்.
சப்பாத்தியில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது என்றாலும், ரொட்டியாக தயாரித்து சாப்பிடுவதற்கு பதில், தோசை போல வார்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மை என்கிறார்கள். ..
அதற்காக கோதுமை சப்பாத்தி, தோசையை சாப்பிட்டால் மட்டும் ரத்த சர்க்கரை ஏறாது என்று சொல்ல முடியாது.. கோதுமை மாவிலும் கிளைசெமிக் குறியீடு அதிகம் உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.. எனவே, கோதுமை மாவிலுள்ள கிளைசெமிக் குறியீட்டை குறைத்து, அதன்பிறகு கோதுமை மாவை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம்.
ஊட்டச்சத்துக்கள்
இதற்கு முழு கோதுமையை சுத்திகரிக்காமல் அரைக்கப்படும் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.. இதில், 50 முதல் 55 வரை மட்டுமே கிளைசெமிக் குறியீடும், ஏராளமான நார்ச்சத்துக்களும் , ஊட்டச்சத்துக்களும் உள்ளன.. இது இரத்த ஓட்டத்தில் இன்சுலினை கொண்டு செல்ல உதவுகிறது..
இந்த கோதுமை மாவிலேயே நார்ச்சத்து இருந்தாலும், உயர் நார்ச்சத்துள்ள உணவுகளையும் சப்பாத்தியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கிளைசெமிக் குறியீடு
இதனால் கிளைசெமிக் குறியீடு மேலும் குறையும்.. கோதுமை மாவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டின் செரிமானத்தை தாமதமாக்க, மாவுச்சத்து அல்லாத, பருப்பு வகைகள், பழங்களையும் சேர்த்து கொள்ளலாம். எனவே, வெறும் கோதுமை மட்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதில்லை..
சப்பாத்தியுடன் காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது, அதேபோல, கோதுமை மாவில், உளுந்து மாவையும் சேர்த்து சப்பாத்தி செய்தால், இன்னும் நல்லது... கோதுமைக்கு பதிலாக பார்லி மாவிலும் ரொட்டி சுட்டு சாப்பிடலாம்.
சத்தான குதிரை வாலி
அரிசிக்கு பதிலாக கோதுமை மட்டுமே தீர்வில்லை.. சாதம் சாப்பிட வேண்டுமானால், பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்ற முழு தானிய அரிசிகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் குதிரைவாலி தவிர்க்க முடியாதது.. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது..
வெறும் 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை குதிரைவாலி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துகிறது..குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், குதிரைவாலி அரிசியை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கக்கூடாது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications