செம்பருத்தி பூக்களை சாப்பிடலாமா? நோயெதிர்ப்பு சக்தியை கூட்டி, உஷ்ணத்தை ஓட்டி.. வாவ் செம்பருத்தி பூ
சென்னை: செம்பருத்தி பூக்களை சாப்பிடலாமா? எப்படி சாப்பிட வேண்டும்? செம்பருத்தியை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செம்பருத்தி பூக்கள் எப்போதுமே குளிர்ச்சி வாய்ந்தவை. எனவே, உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த பூக்களை தாராளமாக பயன்படுத்தலாம்.. இதன் பூக்கள், விழுதுகள், இலைகள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை என்றாலும், வெறும் பூக்களிலேயே ஏராளமான ஆச்சரியம் உள்ளன.

இதயம்: இருதயத்துக்கு இந்த பூக்கள் மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இநத் செம்பருத்தி பூக்கள் வரப்பிரசாதம்.. இவர்கள் இந்த டீயை அடிக்கடி குடிக்கலாம். அல்லது வெறும் பூவின் இதழ்களை மட்டுமே தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்..
அந்தவகையில், செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது இதழ்களை கழுவி, ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றிலும் குடிக்கலாம். இப்படி குடித்துவரும்போது, இதயத்தில் ஏற்கனவே தொந்தரவு இருந்தாலும் அவை குணமாகிவிடும்.
செம்பருத்தி டீ: அல்லது செம்பருத்தி பூக்களில் டீ தயாரித்து குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நான்கைந்து செம்பருத்தி பூக்களை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறவைத்து குடிக்கலாம்.. அல்லது இந்த பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் சாப்பிடலாம். இந்த பவுடரில் சூப் போல தயாரித்து குடித்தால், உடலிலுள்ள பித்தம் விலகிவிடும்.
பெரும்பாலும் பெண்களின் பல்வேறு உடல்நல தொந்தரவுகளை இந்த செம்பருத்தி பூக்கள் தீர்க்கின்றன.. கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூக்கள் அருமருந்தாகின்றன.. மாதவிடாய் நேரத்தில், ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், செம்பருத்தி பூக்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.
மாதவிடாய்: அதேபோல, செம்பருத்தி பூக்களை விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலும், மாதவிடாய் பிரச்சனை சரியாகும்..
செம்பருத்தி பூக்களை வெறும் நீரில் கொதிக்க வைத்து குடித்தால், உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. அதேபோல உடல் சூடு தொடர்பான கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற அனைத்து உஷ்ணம் தொடர்பான கோளாறுகளுக்கு இந்த செம்பருத்தி தண்ணீர் சிறந்த மருந்தாகும்.
சிறுநீர் எரிச்சல்: சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவை இருந்தாலும், இந்த தண்ணீர் குடிக்கும்போது நீங்கிவிடும். உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறி குடல் ஆரோக்கியம் தழைக்கும்.. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள், அசிடிட்டி, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், இந்த செம்பருத்தி தண்ணீரை பயன்படுத்தலாம்..
இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், இந்த செம்பருத்தி பூக்களின் டீயை குடிக்கலாம.. உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, சருமம், தலைமுடி சார்ந்த பிரச்சனைகளையும் இந்த செம்பருத்தி பூக்கள் தீர்க்கின்றன. இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த செம்பருத்தி பூக்களின் டீ மிகச்சிறந்த நன்மையை தரும்..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications